கூடலூரில் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளின் ஒருங்கினைப்பு குழு கீழ் கண்ட அழைப்பு விடுத்துள்ளது.
நமது அண்டை மாநிலம் வயநாடு பகுதியில் நடந்த வரலாறு காணாத கோர இயற்கை சீற்றத்தில் உயிர் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் எதிர்வரும் 4-08-2024 ஞாயிறு காலை 11.00 மணிக்கு அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சமூக நல அமைப்புகள் இணைந்து கூடலூரில் மவுன ஊர்வலம் நடத்தப்படுகிறது.
காலை 11.00 மணிக்கு கூடலூர் நகராட்சி அலுவலகம் முன்பிருந்து மவுன ஊர்வலம் தொடங்கி கூடலூர் புதிய பேருந்து நிலையம் வழியாக சென்று கூடலூர் காந்தித் திடலில் அஞ்சலி செலுத்தி நிறைவடையும்.
இந்நிகழ்வில் அனைத்து அரசியல் கட்சியினர், வியாபாரிகள், வாகன ஓட்டுநர்கள், பொதுமக்கள் மற்றும் அனைத்து சமூக நல அமைப்பினர் கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளும்
அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளின் ஒருங்கிணைப்புக் குழு.
தொடர்புக்கு:
N.Vasu 9443017799 | K. Hamza 9443809932 | Sahadevan 9486345643
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment