நிபா வைரசுக்கு சிறுவன் உயிரிழப்பு: கேரளாவில் 406 பேர் கண்காணிப்பு - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 23 July 2024

நிபா வைரசுக்கு சிறுவன் உயிரிழப்பு: கேரளாவில் 406 பேர் கண்காணிப்பு


கேரள மாநிலத்தில் பல்வேறு காய்ச்சல்கள் பரவியிருக்கும் நிலையில் நிபா வைரசுக்கு 14 வயது சிறுவன் ஒருவன் பலியானான். மலப்புரம் மாவட்டம் பாண்டிக்காடு அருகே உள்ள செம்பரசேரி பகுதியை சேர்ந்த அந்த சிறுவன், கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பரிதாபமாக இறந்தான். இதையடுத்து சிறுவனுடன் தொடர்பில் இருந்தவர்களின் பட்டியலை சுகாதாரத்துறையினர் தயார் செய்தனர்.அந்த பட்டியலில் சிறுவனின் குடும்பத்தினர், அக்கம்பக்கத்தினர் என 330 பேர் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் உள்பட 406 பேர் சுகாதார துறையினரின் நேரடி கண்காணிப்பில் உள்ளதாகவும், அவர்களில் 139 சுகாதார பணியாளர்கள் உள்பட 194 பேர் ஆபத்து உள்ளவர்களாக வகைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் தெரிவித்திருக்கிறார்.கேரள மாநிலத்தில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் தற்போது வரை நிபா வைரசுக்கு 21 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நிபா வைரஸ் பரவலையடுத்து, கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள தமிழக எல்லை பகுதிகளில் கண்காணிப்பை சுகாதாரத்துறையினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.

தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத் கூடலூர் செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதளி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad