32 கோடி பேர் சுற்றுலாவுக்காக வருகை தந்ததாக தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் தகவல் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 9 July 2024

32 கோடி பேர் சுற்றுலாவுக்காக வருகை தந்ததாக தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் தகவல்



   நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா தளங்களை மேம்படுத்துவது மற்றும் புதிய சுற்றுலா தலங்களை கண்டறிவது குறித்து சுற்றுலாத்துறை அமைச்சர் கா ராமச்சந்திரன் சுற்றுலாத்துறை மேலாண்மை இயக்குனர் சமய மூர்த்தி ஆகியோர் ஊட்டி படகு இல்லத்தில் ஆய்வு செய்தனர். பின்னர் அமைச்சர் ராமச்சந்திரன் அவர்கள் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது நீலகிரியில் சுற்றுலா தளங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை சுற்றுலாத்துறை மேலாண்மை இயக்குனருடன் இணைந்து ஆய்வு செய்யப்பட்டது அதில் ஊட்டி படகு இல்லம் பைக்காரா படகு  இல்லம் ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்யப்பட்டதில் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஊட்டியில் குவிந்து விடுகின்றனர் தொட்டபெட்டா பூங்காவை மட்டுமே கண்டு களித்து செல்கின்றனர்.


 இதனால் ஊட்டியில் கூட்ட நெரிசல் மற்றும் போக்குவரத்து நெரிசில் ஏற்படுகிறது எனவே மாவட்டம் முழுவதும் சுற்றுலாவை பரவலாக்கும் வகையில் குன்னூர் கோத்தகிரி மைனலா உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா தலங்களை அமைக்க மற்றும் அதற்கான சாத்திய கூறுகள் என்ன என்பதை கண்டறிந்து வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள கலந்து ஆலோசித்து முடிவு செய்யப்படும்  என்றும் மற்றும் தமிழ்நாட்டுக்கு 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டில் 28 கோடி சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். இந்த எண்ணிக்கை 2023 ஆம் ஆண்டில் 32 கோடியாக உயர்ந்துள்ளது சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்ததை முன்னிட்டு மருத்துவ சுற்றுலா உட்பட பிற சுற்றுலாக்களை பிரபலப்படுத்த உள்ளோம். தமிழ்நாட்டில் சுற்றுலா வளர்ச்சிக்காக ரூபாய் 40 கோடி கோரப்பட்டுள்ளது முதற்கட்டமாக எல் என் டி நிறுவனம் மூலமாக ஆய்வு நடத்தப்படுகிறது இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad