கோத்தகிரியில் முப்பெரும் விழா 12.7.2024 வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 11 July 2024

கோத்தகிரியில் முப்பெரும் விழா 12.7.2024 வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.




நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பேருந்து நிலையம் எதிரே கோத்தகிரி நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தால் அன்பு மேடை அமைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கு நாம் உபயோகித்து புதிது போல் உள்ளது மற்றும் பொதுமக்கள் தங்கள் பிறந்த நாள் திருமண நாள் ஆகிய தினங்களில் புதிய ஆடைகளையும் இந்த அன்பு மேடையில் வைத்துவிடுவார்கள். அதை தேவைப்படுவோர் எடுத்து உபயோகப்படுத்துவர். இதைப்பற்றி ஏற்கனவே தமிழக குரல் செய்தியாக வெளியிட்டு அதிக மக்கள் பயன்பெறுகின்றனர் கோத்தகிரி நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்திற்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் தெரிவித்ததுடன் தங்களின் சிறப்பான இந்த பணி தொடரட்டும் என பதிவிட்டிருந்தோம். பொதுமக்கள் இந்த செய்தியை பார்த்து கோத்தகிரி நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்திற்க்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.



ஜூலை 12 வெள்ளிக்கிழமை அன்று காலை 11 மணிக்கு கோத்தகிரி நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் மற்றும் கோத்தகிரி சிறப்பு நிலை பேரூராட்சி இணைந்து  அன்பு மேடை விரிவாக்கம் துவக்க விழா, விருதுகள் வழங்கும் விழா, போதையால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு விழா என முப்பெரும் விழா நடத்துகிறது.




பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு முப்பெரும் விழாவை சிறப்பித்து தர வேண்டும் என கோத்தகிரி நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் மற்றும் கோத்தகிரி சிறப்புநிலை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad