வயநாடு நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் உட்பட 10 தமிழர்கள் உயிரிழந்துள்ளனர். வயநாட்டில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 238 ஆக உயர்ந்துள்ளது முண்டக்கை சூரல் மலை மேப்பாடி ஆகிய இடங்களில் நேற்று அதிகாலை பெறும் நிலச்சரிவு ஏற்பட்டது இந்த நிலச்சரிவின் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த காளிதாஸ் என்பவரின் உடல் அவரது சொந்த ஊரான கூடலூர் அருகே குழியம்பாறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது மற்றும் 33 வயதான இவர் தங்கை திருமணத்தை முடித்த கையோடு தனது திருமணத்திற்காக வீடு கட்ட கடன் வாங்கி இருந்தார் அதனை திருப்பி செலுத்துவதற்காக நாலு மாதங்களாக கேரளாவுக்கு கட்டிட வேலைக்கு சென்று இருந்த நிலையில் எதிர்பாராத விதமாக நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தார். இன்று காளிதாஸ் உடல் அவர் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டது.
அதைக் கண்டு கதறி அழுத அவர்கள் குடும்பத்தினரை பார்த்து அந்த ஊரே சோகத்தில் மூழ்கியது இதே போல் வயநாட்டின் சூரல் மலை கிராமத்தில் உள்ள சிவன் கோவில் அர்ச்சகராக இருந்த கல்யாண குமாரின் உடலும் அவரது சொந்த ஊரான பந்தலூர் அடுத்துள்ள ஐய்யன் கொல்லிக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இவர்கள் போல் பலர் பல இடத்தில் பாறைகள் இடுக்கிலும் மண்ணுக்குள் புதைந்தும் கண்டுபிடிக்கப்பட்டது. கேரளா வரலாற்றில் மிக மோசமான நிலச்சரிவு இது என்பதால் நேற்றும் இன்றும் கேரளா அரசு துக்கம் அனுசரிக்கும் வகையில் திருவனந்தபுரத்தில் உள்ள சட்டப்பேரவையில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது 11 மாவட்டங்களில் இன்று கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கேரளா முதல்வர் பீனராய் விஜயனும் ஆளுநர் ஆரிப் முகமது கானும் வயநாட்டுக்கு சென்று மீட்பு பணிகளை நேரில் கண்காணிக்க உள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment