உதகையிலிருந்து தொலைதூர வழித்தடங்களுக்கு 3.80 கோடி மதிப்பீட்டில் பத்து புதிய பேருந்துகளை உதகை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் அவர்கள் துவக்கி வைத்தார். குறிப்பாக உதகையிலிருந்து தொலைதூர வழித்தடங்களான திருச்சி மதுரை தேனி கரூர் சேலம் ஈரோடு கண்ணனூர் கள்ளிக்கோட்டை மற்றும் பாலக்காடு போன்ற பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படும் பழைய பேருந்துகளுக்கு பதிலாக 3.80 கோடி மதிப்பீட்டில் 10 புதிய பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. இன்று முதல் தொலைதூரம் பயணம் செய்யும் பொதுமக்கள் இந்த பேருந்துகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் அவர்கள் தெரிவித்தார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment