தமிழ்நாடு அரசு மின்சார துறை (EB) customer care 94987 94987அறிவிப்பு : - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 29 June 2024

தமிழ்நாடு அரசு மின்சார துறை (EB) customer care 94987 94987அறிவிப்பு :


 தமிழ்நாடு அரசு மின்சார துறை (EB) customer care 94987 94987அறிவிப்பு :


உங்களது வீடுகளிலோ.. கடைகளிலோ.. இருக்கும் மின் இணைப்பு சில சமயங்களில் கம்பத்தில் பீஸ் போய் விடும். அல்லது மின் இணைப்பு விட்டு விட்டு கிடைக்கும். அல்லது மழை மற்றும் காற்றினால் இணைப்பு துண்டிக்கப்படும். அல்லது உங்கள் ஏரியாவே இருண்டு விடும். இது போன்ற தருணங்களில் நீங்கள் என்ன செய்வீர்கள்....?


பெரும்பாலும் நமக்கு தெரிந்தது EB அலுவலகம் சென்று எழுதி வைத்து விட்டு வரவேண்டும்.. அவர்கள் சாவகாசமாக வந்து சரி செய்துவிட்டு செல்வார்கள்...


அல்லது லைன்மேன் தெரிந்தவராக இருந்தால் அவரிடம் அழைத்து சொல்லுவீர்கள். உடனே வேலையாகும்... அதுவும் கிராமங்களில் உள்ள வீடுகள் எவ்வளவு அவசரம் என்றாலும், பொழுது இறங்கிய பிறகே வந்து வேலையை செய்து கொடுத்து விட்டு செல்வார்கள்...


இப்பொழுது மின்சார வாரிய ஊழியர்களிடம் இப்படி எல்லாம் அலைய வேண்டியதில்லை. வேலையும் உடனே ஆகணும். அதுக்கு ஒரு நல்ல ஐடியா இருக்கு தெரிந்து கொள்ளுங்கள்...

 

தமிழ்நாட்டில் எந்த மூலையில் இருந்தாலும் *9498794987* என்ற இந்த எண்ணுக்கு அழைத்து உங்கள் முழு மின் இணைப்பு எண்ணையும் தெரிவித்து உங்களுக்கு என்ன  புகாரோ அதை தெரிவித்தால் போதும்...


தெரிவித்து ஐந்து நிமிடத்தில் மாவட்ட தலைநகரிலிருந்து அழைத்து உங்கள் தேவை என்னவென்று கேட்கிறார்கள். அவர்கள் அழைத்த பத்து நிமிடத்தில் உள்ளூரில் உள்ள மின்சார வாரிய தலைமை ஊழியர் நம்மிடம் அழைத்துப் பேசுகிறார். இவர் அழைத்துப் பேசிய ஐந்து நிமிடத்தில் லைன்மேன் உங்களிடம் அழைத்துப் பேசுகிறார்...


அரை மணி நேரத்தில் அனைத்து வேலையும் முடிந்து விடும். அனைத்து வேலையும் முடிந்த பிறகு மீண்டும் மாநிலத் தலைநகர் சென்னையிலிருந்து சேவை மைய ஊழியர் அழைத்து மின்சார வாரிய ஊழியர் நம்மிடம் செய்த வேலைகள் குறித்து தகவல் கேட்ட பிறகே புகாரை முடித்து வைக்கிறார்கள்... 


இந்த மின்சார வாரிய சேவை மைய தொடர்பு எண், மின் இணைப்பை சரி செய்வதற்கு மட்டுமல்ல, வீடுகளின் மேல் செல்லும் லைனை மாற்றி போடுதல் மற்றும் கம்பத்தை மாற்றி போடுதல், பழுதடைந்த கம்பம், புதிய இணைப்பு, தற்காலிக இணைப்பு உட்பட அனைத்து மின்சார வாரிய சேவைகளை பெறலாம்... இந்த சேவை மையத்தின் மூலமாக சேவைகளை பெற்றாலே யாரும் பணம் கேட்பதும் இல்லை...


இது போன்று எளிதாக காரியத்தை சாதிக்க உங்கள் நெருங்கிய வட்டத்தில் உள்ள அரசு ஊழியர்கள் கூட இது போன்ற தகவலை உங்களுக்கு தெரிவிப்பதில்லை...


மின்சார வாரியம் தொடர்பான அனைத்து சேவைகளுக்கான தொலைபேசி எண் : TN EB CUSTOMER CARE : 9498794987 தமிழக குரல் செய்திகளுக்காக  கோத்தகிரிலிருந்து தமிழக குரல் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்

No comments:

Post a Comment

Post Top Ad