நீலகிரி மாவட்டம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த செல்வி என் சன்சிதா எனும் மாணவிக்கு தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் இளைய தளபதி விஜய் அவர்கள் பரிசு வழங்கி ஊக்குவித்தார்... - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 29 June 2024

நீலகிரி மாவட்டம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த செல்வி என் சன்சிதா எனும் மாணவிக்கு தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் இளைய தளபதி விஜய் அவர்கள் பரிசு வழங்கி ஊக்குவித்தார்...

 


நீலகிரி மாவட்டம் குந்தா தாலுக்கா மஞ்சூர் பகுதிக்கு உட்பட்ட பிக்கட்டி பகுதியில் பிரியதர்ஷினி மெட்ரிகுலேஷன் எனும் தனியார் பள்ளி பல வருடங்களாக செயல்பட்டு வருகிறது இந்தப் பள்ளி கடந்த இரண்டு மூன்று வருடங்களாக தொடர்ந்து மாவட்ட அளவில் முதல் இடத்தை தக்க வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது அதில் இந்த ஆண்டு  நடந்து முடித்த 2024 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் சன்சிதா என்னும் மாணவி மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் என்னும் இடத்தை பிடித்து அந்த பள்ளியும் அந்த பள்ளியில் பயின்ற சன்சிதா என்னும் மாணவியும் சாதனை படைத்துள்ளனர் 

இந்த ஆண்டு    சட்டமன்ற தொகுதி வாரியாக அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகள் மற்றும் மாநிலத்தின் முதல் மூன்று இடம் பிடித்த  மற்றும் மாவட்டத்தின் முதல் மூன்று இடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் மற்றும் மக்களுக்குப் பிடித்த பிரபல நடிகருமான இளையதளபதி விஜய் அவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக பரிசுகள் வழங்கி கௌராவித்தார். இதில் இந்த ஆண்டு நமது நீலகிரி மாவட்டம் குந்தா தாலுகாவில் பிக்கட்டி பகுதியில் அமைந்துள்ள பிரியதர்ஷினி மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்த N.சன்சிதா மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து இளைய தளபதி விஜய் அவர்களிடம் பரிசுத்தொகை ரூபாய் 5000/- , சான்றிதழ் மற்றும்  பரிசுகள் பெற்றுள்ளார். 


பரிசு பெற்ற N சன்சிதா  அவர்களுக்கு நீலகிரி மாவட்டத்தின் சார்பில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றனர் அவர்களுடன் சேர்ந்து நமது தமிழக குரல் இணையதள செய்தி குழுமத்தின் சார்பாகவும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவின் சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.  இதில் சன்சிதா உடன் பெற்றோர்களும் சேர்ந்து அந்த ஊக்கத்தொகையினை பெற்று கொன்டு இளைய தளபதி விஜய் அவர்களுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். 



மாணவி சன்சிதா அவர்கள் நம்மிடம் இதைப் பற்றி கருத்து தெரிவிக்கும் பொழுது இந்த சாதனை படைக்க எனக்கு உதவிய எனது பள்ளிக்கும் பள்ளி ஆசிரியர்களுக்கும் எனது பெற்றோர்களுக்கும் இந்த விருதினை வழங்கி என்னை கௌரவித்த நமது இளைய தளபதி விஜய் அண்ணா அவர்களுக்கும் எனக்கு வாழ்த்துக்களை தெரிவித்த நீலகிரி மாவட்ட பொதுமக்களுக்கும் என் உடன் பயிலும் மாணவ மாணவிகளுக்கும் தமிழக குரல் செய்தி நிறுவனத்திற்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்... 


நீலகிரி மாவட்ட இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad