நீலகிரி மாவட்டம் உதகை நகரில் இருந்து குன்னூர் மேட்டுப்பாளையம் கோயமுத்தூர் போன்ற பல்வேறு ஊர்களுக்கு உதகை நகரில் இருந்து அரசு பேருந்துகளும் தனியார் பேருந்துகளும் மற்றும் சுற்றுலா வாகனங்களும் செல்லும் இந்த பரபரப்பான சாலை படு மோசமான நிலையில் உள்ளது என்பதனை ஏற்கனவே தமிழககுரல் இனையத்தள செய்திகளில் கடந்த இரண்டு மூன்று வாரங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தோம் இதனை கண்ட நகராட்சி நிர்வாகம் சாலையை தரமானதாக இடாமல் வெறுமனே கண்துடைப்பிற்காக வெறும் எம்சேன்டு கலந்த பெரிய ஜல்லிக்கற்களைக்கொட்டி ஆங்காங்கே உள்ள சிறிய மற்றும் பெரிய குழிகளில் கொட்டி மூடியது மூடப்பட்ட குழிகள் வெயில் நாட்களில் நன்றாக இருந்தது மழையில் கண்துடைப்பிற்காக மூடிய குழிகளில் இருந்து வெறுமனே போட்ட கற்களை மழை வெள்ளம் கபலிகரம் செய்து குழியில் இருந்த கற்களை இழுத்து சென்றது.
வெறுமனே மூடிய குழிகள் பழைய நிலைக்கே வந்தது இதனை நெடுஞ்சாலைதுறையினர்களும் நகராட்சி அதிகாரிகளும் அதனைக் கண்டு போர் காலத்தில் அடிப்படையில் சாலையில் உள்ள பயணிகளை பழிவாங்க காத்திருக்கும் குழிகளை விரைவில் தரமானதாக மூடினால் நலமாக இருக்கும் என வாகன ஓட்டுனர் களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
நீலகிரி மாவட்ட தமிழககுரல் இனையத்தள செய்திகளுக்காக உதகை தாலுக்கா செய்தியாளர் உதகை விஜயராஜ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழககுரல் இனையத்தள செய்திப் பிரிவு
No comments:
Post a Comment