நீலகிரி- ரேஷன் கடைகளில் புதிய இயந்திரம் மூலம் பொருட்கள் வினியோகம். - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 16 June 2024

நீலகிரி- ரேஷன் கடைகளில் புதிய இயந்திரம் மூலம் பொருட்கள் வினியோகம்.


நீலகிரி மாவட்டத்தில்  இயங்கி வரும் ரேஷன் கடைகளில் கடந்த நான்கு நாட்களுக்கு முன் 21 ரேஷன் கடைகளுக்கு பழைய இயந்திரங்களை மாற்றி பயணாளிகள் விவரங்கள் புதிய இயந்திரத்தில் பதிவிறக்கம் செய்து வழங்கும் பணி, புதிய இயந்திரத்தை கையாளும் பயிற்சி மற்றும் மகளிர் உரிமைத்தொகை பணிக்காக கூடுதலாக பணியாற்றியதற்காக கூட்டுறவு பணியாளர்களுக்கான  கூடுதல் பணிநாளை சரி செய்ய ஒருநாள்  விடுமுறை ஆகிய காரணங்களால் கடந்த 4 நாட்களாக ரேஷனில் பொருட்கள் வழங்கும் பணி நடைபெறவில்லை.


இன்று( ஜூன்16 ஞாயிறு) முதல் புதிய இயந்திரங்கள் மூலம் பொருட்கள் வழங்கும் பணி நீலகிரி மாவட்டத்தில் உள்ள  ரேஷன் கடைகளில்  நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. பயணாளிகள் புதிய இயந்திரத்தில் கைரேகை பதிவுசெய்து பொருட்கள் பெற்றுச்செல்கின்றனர். இந்த புதிய இயந்திரத்தில் கைரேகை சரியாக விழாமல் உள்ளவர்களுக்கு கண் கருவிழி ஸ்கேனர் மூலம் பயணாளிகளை அடையாளர் காணும் முறையுடன் மென்பொருள் அமைக்கப்பட்டு உள்ளது.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad