ரோட்டில் இருபுறமும் நிற்கும் வாகனங்களினால் பொதுமக்களுக்கு பெரும் இடையூறுகள் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 9 June 2024

ரோட்டில் இருபுறமும் நிற்கும் வாகனங்களினால் பொதுமக்களுக்கு பெரும் இடையூறுகள்
நீலகிரி மாவட்டம் உதகை நகரில் இன்று. 9:6:2024 ஞாயிற்றுக்கிழமை மாலைஉதகை யிலிருந்து குன்னூர் செல்லும் ரோட்டில் உள்ள. ஐ  பவுண்டேஷன் கண் மருத்துவமனை அருகில் இருந்து. உதகை நகருக்கு செல்லும் குறுக்கு வழி சாலை உள்ளது. இந்த சாலை எப்பொழுது பரபரப்பாக காணப்படும். இந்த சாலையை ஒட்டி அநேக. காட்டேஜிகள்  உள்ளது. காட்டேஜின் உரிமையாளர்கள்  கட்டிடங்களை கட்டும் பொழுது. தங்கள் வாங்கிய இடங்களுக்கு சரியாக  கட்டிடங்களை கட்டி உள்ளார்கள். காட்டேஜிகளை  சுற்றுலா பயணிகளுக்கு தினசரி வாடகைக்கு விடும்பொழுது. அவர்கள் வரும் வாகனங்கள் நிறுத்த கூட இடம் இல்லாத படி உள்ளதால். சுற்றுலா வாகனங்களை ரோடுகளில் நிறுத்தும்நிலை ஏற்படுகிறது. மேலும் அந்த ரோடுகளில் செல்லும் வாகனங்களுக்கு நிறைய இடையூறுகள் ஏற்படுகின்றன. அதுபோல இன்று மாலை சுமார் 6:30   மணி அளவில். சுற்றுலா வாகனங்கள் நிறைய ரோட்டில் நிறுத்தி வைத்து விட்டு சுற்றுலா வாகன ஓட்டிகள் சென்று  விட்டபடியினால். உதகை க்கு செல்லும் வாகனங்களும் குன்னூர் செல்லும் வாகனங்களும் செல்ல முடியாமல் ஒரு மணி நேரத்திற்கு மேல் வாகனங்கள் சவுத்வீக்முதல் எச் எம் டி வரையில் இருபுறமும் நின்றது அதன் பிறகு பொதுமக்களில்சிலர்இடையூறுகளைசரி செய்து வாகனங்கள் செல்ல உதவினார்கள் இதை உடனேயே காவல் துறையினர் இதனைக் கண்டு பொதுமக்கள் தங்களின் பல்வேறு பணிகளுக்கும் அவசர தேவைகளுக்கும் சென்று வர நல்லதொரு தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கேட்டு கொள்கிறார்கள்.


நீலகிரி மாவட்ட தமிழகுரல் இனையத்தள செய்திகளுக்காக உதகை தாலுக்கா செய்தியாளர் உதகை விஜயராஜ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழககுரல் இனையத்தள செய்திப் பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad