கோத்தகிரி கெச்சகட்டி பகுதியில் சிறுத்தை டேரா. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 9 June 2024

கோத்தகிரி கெச்சகட்டி பகுதியில் சிறுத்தை டேரா.நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கன்னேரிமுக்கு கெச்சகட்டி அருகே உள்ள பனக்கம்பை பகுதியில் அமைந்துள்ள ஒரு வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசி டிவியில் ஒற்றை சிறுத்தை அடிக்கடி வெளிச்சம் உள்ள மெயின் ரோட்டில் மேலும் கீழும் ஒய்யார நடைபோட்டுக்கொண்டுள்ளது. அங்குள்ள சிசி டிவியில் அனிமல் பிளானட் சேனல் போல அடிக்கடி தென்படுவது சர்வசாதாரணம் ஆக உள்ளது.பல டிவி சேனல்களிலும் செய்தித்தாள்களிலும் செய்தி வெளியிட்டு நொந்துவிட்டனர்.


அந்த பகுதி பொதுமக்கள் இனி பகலிலும் சிறுத்தை வரலாம் என அஞ்சுகின்றனர் கன்னேரிமுக்கு பள்ளி வேறு அருகே உள்ளது. ஆகவே வனத்துறையினர் நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் முடிவடைந்து விட்டதால் ஏதாவதொரு அசம்பாவிதம் நடக்கும் முன் துரித நடவடிக்கை எடுத்து சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விடவேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A.கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad