நீலகிரி மாவட்டத்தில் பண்டைய காலம்தொட்டு மலை காய்கறிகள் விவசாயம் நடந்தது மக்கள் உப்பை மட்டுமே சமவெளி பகுதியிலிருந்து பெற்று அவர்களது அனைத்து உணவு தேவைகளுக்கு தன்னிறைவு பெற்றனர் அந்த பசுமைகால நினைவுகளை மூத்த குடிமக்கள் இன்னும் நினைவு கூர்ந்து வருந்துகின்றனர்.
பணப்பயிர் என நீலகிரியில் நுழைந்த தேயிலை விவசாயத்தால் மக்கள் சிறிதளவு செல்வம் ஈட்டி சந்தோஷப்பட நிலையில் தற்போது பலதரப்பட்ட பிரச்சினைகள் காரணமாக தேயிலை விவசாயிகளின் பொருளாதார நிலை அதள பாதாளத்திற்க்கு சென்றது.
மக்கள் நாகரீகம் என்ற பெயரில் அடுத்த தலைமுறை விவசாயம் செய்யாமல் கார்ப்பரேட் கம்பெனிகளின் கைக்கூலிகளாக மாறிவிட்டனர். அல்லும் பகலும் அந்த கம்பெனிகளுக்கு உழைத்து கிடைக்கும் வருமானத்தை பெரிதாக நினைத்து தூக்கமின்மை சரியான ஊட்டச்சத்து மிக்க உணவு தட்டுப்பாடு ஆகியவற்றால் பணம்மட்டுமே குறிக்கோளாக நினைத்து உணவு தேவையில் தன்னிறைவு பற்றி கவலைப்படவில்லை.
நீலகிரியில் தற்போது விவசாயிகள் வனவிலங்குகள், விவசாய பணியாளர்கள் பற்றாக்குறை, கூலி உயர்வு, இடுபொருட்கள் விலை உயர்வு,கடன் பெற்று அதிக வட்டி செலுத்தி விவசாயம் செய்தல், இயற்கை பேரிடர் ஆகிய பல காரணங்களினால் மலை காய்கறிகள் விவசாயம் சாகுபடி பரப்பளவு குறைந்தது.
அதையும் மீறி நீலகிரி இளித்துரை விவசாயிகள் சிரமப்பட்டு விளைவித்த உருளைக்கிழங்கை அறுவடை செய்யும் பணியில் இருக்கும் பெண்களின் இந்த காட்சி மலரும் நினைவுகளை முன்னிருத்துவதாக உள்ளது.
தற்போது மேட்டுப்பாளையம் NCMS உருளைக்கிழங்கு மண்டியில் 45 கிலோ ஒருமூட்டை விலை ரூபாய் 1200 முதல் அதிகபட்சமாக ரூபாய் 4400 வரை ஏலம் போனதால் விவசாயிகள் தங்களின் முதலீடுகளுடன் சிறிய லாபம் கிடைக்கும் என மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment