நீலகிரி மாவட்டம் கோத்தகிரி (சிறப்பு நிலை) பேரூராட்சி 1972 ஆம் ஆண்டில் கோத்தகிரி நகரின் குடிநீர் தேவைக்காக கதகத்தொரை மற்றும் பட்டகொரை ஊருக்கு அருகில் ஈளாடா தடுப்பனை அமைத்து இன்று வரை சிறப்பாக பராமரித்து வருகிறது. ஐந்தாண்டுகளுக்கு முன்பு ஒருமுறை தூர்வாரப்பட்டது.
நீலகிரியில் இந்த ஆண்டு கோடைமழை பொய்த்த நிலையில் கடைசியாக கிடைத்த ஒரு கோடைமழை மற்றும் வழிமண்டல கீழடுக்கு சுழற்சியால் மழை ஆகிய காரணங்களினால் இந்த தடுப்பனையை சுற்றியுள்ள நீலகிரி மழைக்காடுகளின் நீர்பிடிப்பு காரணமாக ஈளாடா தடுப்பனை நிறம்பி கண்களுக்கு இதமாக காட்சியளிக்கிறது. இதன்பிறகு கிடைக்கும் பருவமழையால் வரும் ஆண்டு கோடையில் கோத்தகிரி பகுதியின் குடிநீர் தேவை பூர்த்தியடையும்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment