உதகை பேருந்து நிலையத்தில் தனியார் வாகனங்கள் ஆக்கிரமிப்பு. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 27 June 2024

உதகை பேருந்து நிலையத்தில் தனியார் வாகனங்கள் ஆக்கிரமிப்பு.



உதகை மத்திய பேருந்து நிலையம் தனியார் வாகனங்களால் ஆக்கிரமிப்புசெய்யப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.                                            

   உலக புகழ் பெற்ற, சுற்றுலாத்தலமான உதகைக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் பயணிகள் மத்திய பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். எப்பொழுதும் கூட்ட நெரிசலாகவே காணப்படும்  பேருந்து நிலையத்தில் இடையூறு ஏற்படுத்தும் விதமாக போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் போக்குவரத்து ஊழியர்கள் தங்களுக்கு சொந்தமான வாகனங்களை பேருந்து நிலையத்தின் உள்ளேயே நிறுத்தி வைத்து சென்றுள்ளனர். இதனை பயண்படுத்தி தனியார் வாகனங்களும் ஊடுருவுகின்றன இதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனை உடனடியாக  நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் சார்பாக கோரிக்கை வைத்துள்ளனர். 


தமிழக குரல் செய்திகளுக்காக உதகை நகர செய்தியாளர் வளன் விமல் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad