ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளர்ச்சி இயக்கம்
இத்திட்டத்தில் தோட்டக்கலை பயிர்கள் பரப்பு விரிவாக்க இனத்தின் கீழ் - காய்கறிகள்,எலுமிச்சை, அத்தி, அவகேடோ, ஸ்ட்ரா பெரி, ஆரஞ்சு, லிட்சி, ரம்புட்டான், மங்குஸ்தான்,கிவி, மிளகு, பூண்டு, இஞ்சிபோன்றபயிர்களுக்கு 40% மானியமாக ஒரு எக்டருக்கு ரூ.13,200/- முதல் ரூ.1,12,000/-வரை மதிப்பிலான விதைகள், பழநாற்றுகள் மற்றும் இயற்கை இடுபொருட்கள் வழங்கப்படுகிறது. பண்ணைகுட்டை அமைத்திட ரூ.1.50 இலட்சம் மதிப்பிலான திட்டத்திற்கு 50% மானியமாக ரூ.0.75 இலட்சம் மானியம் வழங்கப்படுகிறது.
பசுமை குடில் அமைத்திட 50% மானியமாக சதுரமீட்டருக்கு ரூ.422/-முதல் ரூ.467.5/-வரை மானியம் மற்றும் நிழல் வலைக்குடில் அமைத்திட 50% மானியமாக சதுரமீட்டருக்கு ரூ.355/-மானியம் வழங்கப்படுகிறது. பிளாஸ்டிக் நில போர்வைக்கு 50% மானியமாக ரூ.16,000/- மானியம் வழங்கப்படுகிறது. பசுமை குடிலில் கார்னேஷன் மலர்செடிகள் நடவு செய்ய 50% மானியமாக சதுர மீட்டருக்கு ரூ.305/-மானியம் மற்றும் பசுமை குடிலில்லில்லியம் மலர் செடிகள் வளர்த்திட 50% மானியமாக சதுர மீட்டருக்கு ரூ.213/- மானியம் வழங்கப்படுகிறது.
காய்கறிகள் மற்றும் பழங்களின் விற்பனையை மேம்படுத்த 50% மானியமாக ரூ.15,000/- த்திற்கு காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை வண்டி (Mobile Vending Cart) வழங்கப்பட உள்ளது. வாழை விவசாயிகளுக்கு வாழைதார் உரை 50% மானியமாக ரூ.12,500 /-வழங்கப்பட உள்ளது. இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் ஒரு எக்டருக்கு ரூ.3,000/-முதல் ரூ.4,000/-வரை மதிப்பிலான இயற்கை இடுபொருட்கள் வழங்கப்படும். மேலும் மண்புழு உரம் தயாரிக்க கூடாரம் அமைக்க ரூ.50,000/- மானியம் வழங்கப்படும். மேலும், ரூ.16,000/-மதிப்பிலான மண்புழு உரம் படுக்கைகள் ரூ.8,000/- மானியத்தில் வழங்கப்பட உள்ளது.
அறுவடை பின்செய் நேர்த்தி திட்டத்தின் கீழ் காய்கறி மற்றும் கொய் மலர்களை
2-50C வெப்ப நிலையில் சேமித்து, பின்னர் விற்பனை செய்ய Pre-Cooling Unit அமைக்க
ரூ.25.00 இலட்சம் மிதிப்பிலான திட்டத்திற்கு 35% மானியமாக ரூ.8.75 இலட்சம் மானியம்
வழங்கப்படுகிறது. காய்கறிகளை சேமிக்க ரூ.4.00 இலட்சம் நிதியில் 600 சதுர அடி
பரப்பிலான சிப்பம் கட்டும் அறை அமைக்க 50% மானியமாக ரூ.2.00 இலட்சம் மானியம் வழங்கப்படுகிறது. மேலும் காய்கறிகளை சேமிக்க குளிர் சேமிப்பு கிடங்கு (Cold Storage)அமைக்க 50% மானியமாக ஒரு மெட்ரிக்டன்-க்கு ரூ.3,500/- மானியம் வழங்கப்படுகிறது.
நுண்ணீர் பாசன திட்டம்
இத்திட்டத்திகீழ் 100% மானியத்தில் விவசாயிகளுக்கு தெளிப்பு நீர்பாசன கருவிகள் வழங்கப்பட உள்ளது. புதிதாக தெளிப்பு நீர்பாசன கருவிகள் பெற விண்ணப்பிக்கும் விவசாயிகள், டீசல்/மின் மோட்டர் வாங்க விரும்பினால், அதற்கு ரூ.15,000/-(50%)பின்னேற்பு மானியமாக வழங்கப்படும், அதுமட்டுமின்றி, நுண்ணீர் பாசன திட்டத்தில் விண்ணப்பிக்கும் விவசாயிகள் பண்ணைகுட்டைஅமைக்க ரூ.75,000/- (50%) பின்னேற்பு மானியமாக பெற்றுக்கொள்ளலாம்.
தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம்
இத்திட்டத்தின் கீழ் வாழைசாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, தார் ஈன்றியவாழைகளுக்கு முட்டுகள் (Propping) அமைக்க ஒரு எக்டருக்கு ரூ.25,000/-மானியம்வழங்கப்படும். மேலும், பாகற்காய், பீன்ஸ் போன்ற பயிர்களுக்கு பந்தல் அமைக்க ஒரு எக்டருக்கு ரூ.3.00 இலட்சம் பின்னேற்பு மானியமாக வழங்கப்படும்.
மாநில தோட்டக்கலை வளர்ச்சித் திட்டம்
இத்திட்டத்தின் கீழ் மாடித்தோட்டம் அமைக்க இடுபொருட்கள் 50% மானியத்தில்,ஒரு தொகுப்பிற்கு ரூ.450/-மானியமாக வழங்கப்பட உள்ளது. சிறிய அளவிலான காளான் வளர்ப்பு கூடாரம்அமைக்க ரூ.50,000/- பின்னேற்பு மானியம் வழங்கப்படும்.
வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை
இத்திட்டத்தின் கீழ் 2024-25 ஆம் ஆண்டு நீலகிரி மாவட்ட விவசாயிகளுக்கு பயிற்சிகள் (மாவட்ட அளவில், மாநில அளவில்) கண்டுனர் சுற்றுலா (மாவட்ட அளவில், மாநில அளவில்,வெளி மாநில அளவில்) செயல் விளக்கங்கள், விவசாயிகள் மற்றும் வேளாண் விஞ்ஞானிகள் கலந்துரையாடல், மற்றும் பண்ணைப்பள்ளி ஆகிய இனங்களில் பயன் பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அவர்களை தொடர்புகொண்டு தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும், மேற்காணும் பயிற்சிகளுக்கு விவசாயிகள்தங்கள் பெயரை பதிவு செய்த மூதுரிமையின் அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்படும்.மேற்கண்ட அனைத்து திட்டங்களில் பயனடைய விரும்பும் விவசாயிகள் உரியஆவணங்களுடன் (ஆதார், Ration Card, Passport Size Photo, சிட்டா, அடங்கல்,ஆனபோக சான்றிதழ் FMB) தங்கள் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்ட தமிழககுரல் இனையததள செய்திகளுக்காக உதகை தாலுக்கா செய்தியாளர் உதகை விஜயராஜ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழககுரல் இனையத்தள செய்திப் பிரிவு
No comments:
Post a Comment