உதகை ஏடிசி பகுதியில் மழையின் காரணமாக தேங்கிய கழிவு நீரை உடனடியாக சரி செய்த நகர மன்ற உறுப்பினர் அவர்களுக்கு பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் சுற்றுலா பயணிகளும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்... - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 9 June 2024

உதகை ஏடிசி பகுதியில் மழையின் காரணமாக தேங்கிய கழிவு நீரை உடனடியாக சரி செய்த நகர மன்ற உறுப்பினர் அவர்களுக்கு பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் சுற்றுலா பயணிகளும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்...


உதகை ஏடிசி பகுதியில் மழையின் காரணமாக தேங்கிய கழிவு நீரை உடனடியாக சரி செய்த நகர மன்ற உறுப்பினர் அவர்களுக்கு பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் சுற்றுலா பயணிகளும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்...



 உதகை ஏடிசி சாலையில் இருந்து மத்திய பேருந்து நிலையத்திற்கு செல்லும் வழியில் எட்டின்ஸ் சாலை அமைந்துள்ளது. மற்றும் அங்கு இரண்டு மருத்துவமனைகளும் அமைந்துள்ளன. அனைத்து பேருந்துகளும்  மேட்டுப்பாளையம் கோயம்புத்தூர் கோத்தகிரி செல்லும் முக்கிய வழித்தடம் ஆகும். அவ்விடத்தில் அதிக மழையின் காரணமாக பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கிய நிலையில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அரசு பேருந்து ஓட்டுநர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர் உடனே அப்பகுதி நகரமன்ற உறுப்பினர் மீனா  தியாகராஜன் நகராட்சி ஊழியர்களை அழைத்து வந்து சாலையை சீரமைத்தனர் இதனால் மக்களுக்கு பெரும் உதவியாக இருந்தது. 



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad