வில்லியம் கிரகம் மெக்ஐவர் நினைவிடத்திற்கு சென்று மாவட்ட ஆட்சியர் மரியாதை - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 9 June 2024

வில்லியம் கிரகம் மெக்ஐவர் நினைவிடத்திற்கு சென்று மாவட்ட ஆட்சியர் மரியாதை

 


வில்லியம் கிரகம் மெக்ஐவர் நினைவிடத்திற்கு சென்று மாவட்ட ஆட்சியர் மரியாதை     



உதகை புனித ஸ்டீபன் ஆலய வளாகத்தில் அரசு தாவரவியல் பூங்காவை உருவாக்கிய வில்லியம் கிரகம் மெக்ஐவர் இவர் நினைவிடம் உள்ளது. அங்கு மெக்ஐவர் 148 வது நினைவு தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் மு. அருணா மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தோட்டக்கலைத்துறை இயக்குநர் ஷிபிலா மேரி, அரசு பூங்கா உதவி இயக்குனர் பாலசங்கர்,  ஸ்டீபன் ஆலய போதகர் மற்றும் பலர் பங்கேற்றனர். உதகையில் சுற்றுலா சிறப்புகளில் புகழ்பெற்று திகழும் 176 ஆண்டு பெருமைகள் கொண்டுள்ள அரசு தாவரவியல் பூங்காவை வில்லியம் கிரகம் உருவாக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அரசு தாவரவியல் பூங்காவினால் சுற்றுலா பயணிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது அரசு தாவரவியல் பூங்காவை காண பல்வேறு இடங்களில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருடம் வருடம் கோடை சீசனில் வந்து பார்வையிடுவார்கள்.



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad