கூடலூர் பகுதியில் மண் சரிவு - கனமழை காரணமாக கூடலூர், பந்தலூர் தாலுக்கா பள்ளிகளுக்கு விடுமுறை - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 26 June 2024

கூடலூர் பகுதியில் மண் சரிவு - கனமழை காரணமாக கூடலூர், பந்தலூர் தாலுக்கா பள்ளிகளுக்கு விடுமுறை




 கூடலூர் பகுதியில் நேற்று முதல் கன மழை பெய்து வருகிறது.  கூடலூர் - தேவர்சோலை  சாலை 4 மைல் அருகே நேற்று இரவு மண் சரிவு ஏற்பட்டது.கூடலூர் -தேவர் சோலை மீனாட்சி அருகே மின்கம்பம் சாய்ந்து போக்குவரத்து பாதிப்படைந்தது 


 இருசக்கர வாகனம் மீது மரமும் மின்கம்பம் சாய்ந்தது விழுந்ததில்  பாடந்துரை பகுதியை சேர்ந்த இளைஞர் லேசான காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


கனமழை காரணமாக கூடலூர், பந்தலூர் தாலுக்கா பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒரு நாள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.


.தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட புகைப்படக் கலைஞர்  என். வினோத்குமார்.

No comments:

Post a Comment

Post Top Ad