சர்வதேச போதை ஒழிப்பு தினம். போதை ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு கூட்டம் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 26 June 2024

சர்வதேச போதை ஒழிப்பு தினம். போதை ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு கூட்டம்



நீலகிரி மாவட்ட காவல் துறையினர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தக் கூட்டம் நீலகிரி மாவட்டம் உதகை பொட்டானிக்கல் கார்டன் சாலைக்கு செல்லும் பகுதியில் அமைந்துள்ள பழங்குடியினர்கள் மறுவாழ்வு மைய கட்டிடத்தில் முதல் மாடியில் உள்ள பெரிய கூட்ட அரங்கில்  நடந்தது. இந்த விழிப்புணர்வு கூட்டம் நீலகிரி மாவட்ட ஆட்சியாளர் தலைமையில் நடைபெற்றது. இந்த போதை விழிப்புணர்வு கூட்டத்திற்கு தலைப்பு உனக்கும் வேண்டாம் எனக்கும் வேண்டாம். என்ற வாசகம் எழுதப்பட்டிருந்ததை காண முடிந்தது.



 இந்தக் கூட்டத்தில் போதையானது எந்த வழியில் வந்தாலும் போதை போதை தான்  என்று எடுத்துரைக்கப்பட்டது மாணவ மாணவியரும் காவல்துறை கண்காணிப்பாளரும் மாவட்ட ஆட்சியாளரும் மற்றும் ஆல்கஹாலிஸ்  அனானிமஸ்இல் உள்ள ஒரு சில நண்பர்களும் தாங்கள் போதையை நாடி சீரழிந்து கடந்து வந்த பாதைகளை குறித்தும். நாங்கள் எப்படி இருந்தோம் பின் என்ன நேர்ந்தது.இப்பொழுது எப்படி இருக்கிறோம் என்பதை குறித்தும் பேசினார்கள் போதை என்ற அரக்கனை விட முடியாமல் தவிப்பவர்கள். எங்களைப் போன்றவர்களை தொடர்பு கொண்டு  நயா பைசா கூட செலவில்லாமல் நாங்கள் வாழ்வதைப் போல நீங்களும் வாழ . எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் 

என்றும் கூறினார்கள் இந்த விழிப்புணர் கூட்டத்தில்  போதை குறித்த மேஜிக் ஷோ செயல் விளக்கங்கள் பாடல்கள் மூலம்  போதையே இல்லாத நாட்டை உருவாக்குவோம் என்று விளக்கி 

கூறினார்கள் இறுதியாக விழிப்புணர்வு கூட்டம் இரண்டு மணிக்கு முடிந்தது அனைவரும் அமைதியாக கலைந்து சென்றார்கள்..

நீலகிரி மாவட்ட தமிழககுரல் இனையத்தள செய்திகளுக்காக உதகை தாலுக்கா செய்தியாளர் உதகை விஜயராஜ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழககுரல் இனையத்தள செய்திப் பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad