மலைகளின் அரசி நீலகிரியில் கொட்டி தீர்த்த கனமழை குடியிருப்புகளை சூழ்ந்த மழை நீர் நேரில் பார்வையிட்ட கலெக்டர் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 30 June 2024

மலைகளின் அரசி நீலகிரியில் கொட்டி தீர்த்த கனமழை குடியிருப்புகளை சூழ்ந்த மழை நீர் நேரில் பார்வையிட்ட கலெக்டர்

   

 நீலகிரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழையால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


 மேலும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளதால் பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். வானிலை ஆய்வு மையம் 4 நாட்களுக்கு முன்பு நீலகிரி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலாட் அறிவித்த நிலையில் கடந்த நான்கு நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் பந்தலூர் பகுதியில் கனமழை பெய்து வருகிறது இதனால் கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் அதிக மழை பெய்து வந்த நிலையில் மேலும் தேவாலா பந்தலூர் நாடுக்கானி போன்ற பகுதிகளிலும் நேற்று காலை முதலே மழை பெய்து வருகிறது. 


மழை நீர், சாலை மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சேர்ந்துள்ளதால் அப்பகுதிகள் குளம் போல் காட்சி அளிக்கின்றன. மேலும் காட்டாறு போல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது மேலும் மழை தொடர்ந்து பெய்து வருவதால் மூன்றாவது நாளாக கூடலூர் பந்தலூர் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து பகுதிகளிலும் மாவட்ட நிர்வாகம் சார்பாக தீயணைப்பு துறை மற்றும் காவல்துறை வனத்துறை நெடுஞ்சாலைத்துறை மற்றும் பேரிடர் மீட்பு குழு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் மு. அருணா தெரிவித்துள்ளார்.   மேலும் நீலகிரி மாவட்டம் கூடலூர் ஊராட்சி ஒன்றியம் நெலாக்கோட்டை ஊராட்சி வட்டக்கெல்லி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் தொடர்ந்து பொதுமக்கள் வசிக்கும் பகுதி அருகில் ஆற்றை ஒட்டி வெள்ளம் செல்லப்படுவதை மாவட்ட கலெக்டர் மு அருணா நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் இந்நிகழ்வில் கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி கௌஷிக் , நெல்லியாளம் நகராட்சி ஆணையாளர் முனியப்பன் கூடலூர் வருவாய் கோட்டாட்சியர் செந்தில்குமார்  உட்பட பலர் உடன் இருந்தனர்.


 தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad