ஊட்டியை மாநகராட்சியாக தரம் உயர்த்தும் திட்டத்தை கைவிடாவிட்டால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர திட்டம் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 30 June 2024

ஊட்டியை மாநகராட்சியாக தரம் உயர்த்தும் திட்டத்தை கைவிடாவிட்டால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர திட்டம்

   


  மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் ஊட்டியில் 36 வார்டுகள் உள்ளன. 1987 முதல் சிறப்பு நிலை நகராட்சியாக இயங்கி வரும் ஊட்டியில் மொத்த பரப்பளவு 30 சதுர கிலோமீட்டர் ஆகும். 2010 ஆம் ஆண்டு ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 88,430 பேர் இங்கு வசித்தனர். தற்போது ஊட்டி நகராட்சியில் இதேபோல் 3500 வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகள் உள்ளன சர்வதேச சுற்றுலாத்தலமான நீலகிரிக்கு ஆண்டுதோறும் சுமார் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகின்றனர் இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளின் 90% பேர் ஊட்டிக்கு வருகின்றனர். இந்த நாள் இந்திய அளவிலும் உலக அளவில் பிரசித்தி பெற்றுவிட்டது. 


ஊட்டி நகராட்சி 1866 ஆம் ஆண்டு நகராட்சியாக உருவானது என்பதால் ஊட்டி நகராட்சியில் எல்லையை விரிவாக்கம் செய்து நகராட்சியும் மாநகராட்சிகள் தரம் உயர்த்தினால் அதிக அளவில் அரசு திட்டங்கள் நிதி செயல்பாட்டுக்கு வருவதன் மூலம் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரமும் பொருளாதாரம் உயரும்.  என்று பல்வேறு தரப்பினர்  கோரிக்கைக்கு ஏற்ப ஊட்டி நகராட்சியை மாநகராட்சியாக தரம் தரம் உயர்த்த திட்டமிடப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஐந்தாம் தேதி நகராட்சி தலைவர் வாணிஸ்வரி ஆணையாளர் ஏகராஜ் தலைமையில் நடந்த அவசர கூட்டத்தில் இது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டது.


இதன்படி ஊட்டி நகராட்சியுடன் அருகிலுள்ள கேத்தி மற்றும் இத்தலார் பேரூராட்சி உள்ளத்தி நஞ்சநாடு தொட்டபெட்டா ஆகிய ஊராட்சி பகுதிகளையும் இதில் இணைக்க திட்டமிட்டுள்ளனர். இதற்கு கேத்தி உள்ளிட்ட மேற்கண்ட அனைத்து கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மேற்கண்ட கிராமங்களில் தலைவர்கள் மற்றும் நாக்குபெட்டா படுகர் நல அமைப்பு சார்பில் நடந்த முதல் கட்ட ஆலோசனை கூட்டத்தில் ஊட்டி நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்த கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் தற்போது இரண்டாவது கட்ட கூட்டம் நடைபெற்றது.


இதற்கு நாக்கு பட்டா படுகர் சங்கம் தலைவர் பாபு தலைமை தாங்கினார். செயலாளர் மணிவண்ணன் முன்னிலை வைத்தார் இதில் ஊட்டி சுற்றுவட்டார கிராம பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதுகுறித்து நாக்குபெட்டா படுகர் சங்க நிர்வாகத்தினர் மற்றும் கிராம பஞ்சாயத்து தலைவர்கள் கூறியது  ஊட்டி  நகராட்சியுடன்  சுற்றுவட்டார கிராமங்களை இணைப்பது தொடர்பாக கிராம மக்களுடன் எந்தவித கருத்து கேட்காமல் பரிந்துரை செய்திருப்பது கண்டனத்துக்குரியது. ஊட்டி நகராட்சியை மாநகராட்சியாக மாற்றும்போது வரி இரட்டிப்பாகிறது பொதுவாக மாநகராட்சியாக மாறத் தேவையான அளவு மக்கள் தொகை தொழிற்சாலைகள் இல்லை மேலும் வனவிலங்குகள் அதிகம் வசிக்கும் பகுதியாக உள்ளது. 100 நாள் வேலை திட்டம் பாதிக்கப்படும். கிராம பஞ்சாயத்திற்கு வழங்கப்படும் இலவச குடிநீர் கிடைக்காது எனவே ஊட்டி நகராட்சியை மாநகராட்சியாக மாற்றும் திட்டத்தை கைவிடாவிட்டால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர திட்டமிட்டுள்ளோம் இவ்வாறு அவர்கள் கூறினர். இதைக் கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad