நீலகிரி மாவட்டம் உதகையில் வளர்ப்பு மாடுகள் சாலையோரங்களில் சுற்றித்திரிகின்றன அதனால் போக்குவரத்திற்க்கு இடையூறுகள் ஏற்படுவதுடன் நடந்து செல்லும் பள்ளிக்குழந்தைகள் மற்றும் பொதுமக்களும் பாதிக்கப்படுவதாக நமது தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திதளத்தில் பலமுறை செய்தி வெளியிடப்பட்டது.
தமிழகம் முழுவதிலும் இந்த பிரச்னை உள்ள நிலையில் கடுமையான அபராதம் மற்றும் நடவடிக்கைகள் எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இன்று உதகை எட்டின்ஸ் சாலையில் வளர்ப்பு மாடுகள் சாலைகளில் திரிகின்றன. ஆகவே உதகை நகராட்சி நிர்வாகம் ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடக்கும் முன் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment