தமிழ்நாடு தொண்டு நிறுவனங்கள் கூட்டமைப்பு சார்பில் எமரால்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வானது நடைபெற்றது, நிகழ்வில் தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பின் மாநில துணைத் தலைவர் திரு சுரேஷ் ரமணா அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.
இந்த விழிப்புணர்வு நிகழ்விற்கு சிறப்பு பேச்சாளர்களாக லயன்ஸ் கிளப் உதகமண்ட் கிங்ஸ் சார்பில் மாணேஷ் சந்திரன் அவர்களும் போபியோ பவுண்டேஷன் சார்பில் மோகன்ராஜ் அவர்களும் மானஸ் அறக்கட்டளை சார்பில் சிவ தாஸ் அவர்களும் எமரால்டு ஜெ2 காவல் நிலைய ஆய்வாளர் திரு சீனிவாசன் அவர்களும் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களும் இருப்பாள் மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர் மேலும் எமரால்டு பகுதியைச் சேர்ந்த தன்னார்வலர்களான திரு கே எஸ் டி மகேந்திரன் மற்றும் தீன தயாளன் அவர்களும் கலந்து கொண்டனர் விழாவிற்கு வருகை தந்த அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் பொன்னாடை போற்றி சிறப்பு செய்யப்பட்டது.
இந்த விழாவின்போது போதை பொருள் பயன்படுத்துவதனால் வரும் தீங்குகளை பற்றியும் போதைப்பொருள் பயன்படுத்தினால் எவ்வாறு அதிலிருந்து மீள வேண்டும் என்பதையும் போதைப்பொருள் சட்டவிரோதமாக பயன்படுத்துபவர்கள் பற்றிய புகாரினை மாவட்ட காவல்துறைக்கு எவ்வாறு தகவல் தெரிவிக்கலாம் தகவல் தெரிவிக்க வேண்டிய அலைபேசி எண்களைப் பற்றியும் எடுத்துக் கூறினர் இறுதியில் மாணவ மாணவிகளும் ஆசிரியர்களும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர் போதைப் பொருள் விழிப்புணர்வு பற்றிய உறுதிமொழியுடன் விழிப்புணர்வு நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது விழாவின் இறுதியில் எமரால்டு பகுதியைச் சேர்ந்த திரு கே எஸ் டி மகேந்திரன் அவர்கள் நன்றியுரை கூறி போதை விழிப்புணர்வு நிகழ்வினை நிறைவு செய்தார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment