கள்ளக்குறிச்சியில் கள்ள சாராயம் குடித்து 55 பேர் உயிர் இறந்ததை கண்டித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பதவி விலக கோரி.நீலகிரி மாவட்ட உதகை நகரில் இன்று மாலை ஐந்து மணி அளவில் ஏடிசி காந்தி மைதானம் அருகில் மழையையும் பொறுப்பெடுத்தாமல் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்தக் கண்டண ஆர்ப்பாட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் 50க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டு முதல்வர் ஸ்டாலின் கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு பொறுப்பேற்று. முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினார்கள். உடனடியாக அவர்களை காவல்துறையினர் காவல்துறையின் இரண்டு மூன்று வாகனங்களில் கைது செய்து அழைத்துச் சென்றார்கள்.
நீலகிரி மாவட்ட தமிழககுரல் இனையத்தள செய்திகளுக்காக உதகை தாலுக்கா செய்தியாளர் உதகை விஜயராஜ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழககுரல் இனையத்தள செய்திப் பிரிவு
No comments:
Post a Comment