நீலகிரி மாவட்ட காவல்துறை சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவின் விழிப்புணர்வு முகாம் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 22 June 2024

நீலகிரி மாவட்ட காவல்துறை சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவின் விழிப்புணர்வு முகாம்



 நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் வழிகாட்டுதலின்படி நீலகிரி மாவட்ட  சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு காவல் துணை கண்கணிப்பாளர் அவர்களின் மேற்பார்வையில் ஜூன் 21 வெள்ளிக்கிழமை குன்னுர் காவல் உட்கோட்டத்தில் கோத்தகிரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ரிவர் சைடு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் 

 மத்தியில் தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டங்கள் குறித்தும் சமூக  நீதி, மனித உரிமை,சமத்துவம் ஆகியவற்றின் அவசியம், போதைப்பொருள்களின் தீமைகள்,  போக்குவரத்து விதிகள் குறித்தும், சைபர் குற்றங்கள்குறித்தும் விழிப்புணர்வு கருத்துக்கள் எடுத்து கூறப்பட்டது.



ஒளிப்படம் மூலமாக விழிப்புணர்வு செய்திகள் திரையிடப்பட்டது.ரிவர்சைடு பள்ளி முதல்வர்  அவர்கள் தலைமையில் நடைபெற்ற இம்முகாமில்  சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு துணை காவல் கண்காணிப்பளர் திரு. முத்தரசு அவர்கள் சிறப்புரையாற்றினார்.


SC/ST நல பிரிவு சிறப்பு வட்டாச்சியர் திரு. ராஜசேகர்,கோத்தகிரி போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. பதி, 

நீலகிரி மாவட்ட பழங்குடியினர் பாதுகாப்பு சமூக சேவை அமைப்பு பொறுப்பாளர் திரு. சிவக்குமார் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.


 சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு புள்ளியியல் ஆய்வாளர் திரு. குணசீலன்,மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் திரு. ஜான்,திரு. நேரு , திரு. கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.



நிகழ்வில் மாணவமாணவியரின் உரைவீச்சு, நடனம்,யோகா போன்ற கலை நிகழ்ச்சி நடைபெற்றது.போட்டியில் சாதனை படைத்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K. A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad