நீலகிரி மாவட்டத்தில் மழைக்காடுகள் அதிக அளவில் உள்ளது.
ஆண்டுதோறும் ஜூன் 22 அன்று உலக மழைக்காடுகள் தினமாகும். இந்த ஆண்டின் கருப்பொருள் மழைக்காடுகளை பாதுகாத்து உலகை மேம்படுத்துதல் என்பதாகும்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில கருத்தாளர் ஓய்வுபெற்ற ஆசிரியர் திரு. கே .ஜே. ராஜூ(NTC) அவர்கள் தெரிவித்த கருத்துக்கள்......
உலகில் உள்ள காடுகள் 53 வகையாக பிரிக்கப்படுகிறது நீலகிரி மாவட்டத்தில் உள்ளது மழைக்காடுகள் ஆகும் இந்த காடுகள் மற்றும் புல்வெளிகள் இருள் சூழ்ந்த பகுதியாக காட்சியளிக்கும் இவை மேகத்திலிருந்து மழை நீரை ஈர்த்து ஸ்பான்ச் போன்ற தனது மரநிழல் பகுதியில் சேமித்து வைப்பதுடன் கார்பன் டை ஆக்சைடை கிரகித்து மனித குலத்திற்கு சுத்தமான ஆக்சிஜன் வழங்குகிறது.
நீலகிரி மாவட்ட மழைக்காடுகள் தேக்கி வைத்த நீர் ஆராக ஓடி ஒரு பகுதி காவிரியில் கலந்து தஞ்சையில் நெல் விளைகிறது மற்றும் பவானி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் தான் கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய இடங்களின் குடிநீர் தேவையை பூர்த்திசெய்வதால் தான் நீலகிரியை தென்னகத்தின் தண்ணீர் தொட்டி என அழைக்கப்படுகிறது.
நீலகிரி மாவட்டத்தை சுற்றுலா தலமாக மட்டுமே பார்க்காமல் உறுதியேற்று நீலகிரி மழைக்காடுகளை காப்போம் வளம் பெறுவோம் என தெரிவித்தார்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment