நீலகிரி மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடு. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 3 June 2024

நீலகிரி மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடு.


இந்தியா நாடாளுமன்ற மக்களைவை உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 19 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. ஏழுகட்டங்களாக நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் வாக்கு  எண்ணும் பணி  ஜூன் 4 ஆம் தேதி நாடு முழுவதும் ஒரே கட்டமாக நடைபெறுகிறது.



நீலகிரி நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணும் பணி உதகை அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெறும்.

முன்னேற்பாடு பணிகள் நடந்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


 ஜூன் 4 ஆம் தேதி காலை 6.30 மணிக்கு வேட்பாளர்களின்  முகவர்கள் வாக்கு எண்ணும் மையத்திற்குள் வர வேண்டும் எனவும் 7.30 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணப்படும் எனவும் சரியாக 8 மணி  முதல் வாக்கு பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தாமதமாக வரும் முகவர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.



தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K A.கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad