பூமி ஆனது மனிதன் உட்பட அனைத்து ஜீவன்களுக்கான வாழ்விடம் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 5 June 2024

பூமி ஆனது மனிதன் உட்பட அனைத்து ஜீவன்களுக்கான வாழ்விடம்

 பூமி ஆனது மனிதன் உட்பட அனைத்து ஜீவன்களுக்கான வாழ்விடம் இப்போது சீராக இயங்குவதற்கு நிலம் நீர் காற்று ஆகாயம் நெருப்பு ஆகிய ஐம்பூதங்கள் அவசியம். இவை ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டு தான் இயங்க முடியும் அதில் ஏதேனும் இடையூறு ஏற்படும் பட்சத்தில் தான் சுற்றுச்சூழல் பாதிப்பை சந்திக்கும். சுற்றுச்சூழல் என்ற சொல்லை சமூக சூழல் பொருளாதார சூழல் என்ற சொற்களுடன் ஒப்பிட்டு வேறுபாடு காணலாம். சூழல் என்ற சொல் இயற்கை சுற்றுச்சூழலை குறிப்பிடுகிறது சுற்றுச்சூழல் பல பிரச்சனைகளை எதிர்கொள்கிறது மற்றும் இவற்றில் பல காலப்போக்கில் மோசமடைந்து வருகிறது.    இது நம்மை சுற்றுச்சூழல் நெருக்கடிக்குள் நம்மை தள்ளி விடுகிறது. இந்தப் பிரச்சினைகள் பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்துவது அவற்றின் தீங்கு விளைவிக்கும் விளைவுகளை குறைக்க அவசியம். சுற்றுச்சூழல் மாசுபாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது மற்றும் உலகிற்கு கடுமையான மற்றும் மீள முடியாத சேதத்தை சுமத்துகிறது. 


நகரமயமாக்கல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவை சுற்றுச்சூழலின் அத்தியாவசிய கூறுகளான காற்று நீர் மற்றும் மண் ஆகியவற்றின் தரத்தை குறைப்பதன் மூலம் உயிர் சுற்றுச்சூழலை பேராபத்திற்குள் தள்ளி வருகிறது. பிளாஸ்டிக் கன உலோகங்கள் புதைப்படைவ எரிபொருட்களை எரித்தல் எண்ணெய் கசிவுகள் மின்க கழிவுகள் மற்றும் தொழில்துறை கழிவுகள் மிகவும் அபாயகரமானவை இவற்றில் "இவேஸ்ட்" எனப்படும் அளிக்க முடியாத மின் கழிவுகள் சுற்றுச்சூழலுக்கு மிகுந்த அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றன சுற்றுச்சூழலை பாதிக்கும் நச்சுக்கழிவுகள் 70% மின்க கழிவுகள் என புள்ளி விவரங்கள் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளன. மின்னணு பொருட்களை பயன்படுத்தி அதன் வாழ்நாள் முடிந்த பிறகோ அல்லது அதில் ஏதேனும் கோளாறுகள் ஏற்பட்டு பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும் போது மின் கழிவுகள் உண்டாகின்றன. "இவேஸ்ட்" மற்றும் இஸ்க்ராப் என்ற வார்த்தைகள் அனைத்து உபரி மின்னணு பொருட்களை குறிப்பிட பரவலாக பயன்படுத்தப்படுகின்றன.     அமெரிக்கா யுனைடெட் ஸ்டேட்டஸ் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் மின் கழிவுகளை குளிரீட்டும் மற்றும் உறைய வைக்கும் சாதனங்கள் சிறிய வீட்டு உபகரணங்கள் கணினி மானிட்டர்கள் உட்பட தகவல் தொழில்நுட்ப உபகரணங்கள், தொலைக்காட்சிகள் விளக்குகள் மற்றும் கருவிகள் மருத்துவ சாதனங்கள் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு கருவிகள் தானியங்கி விநியோகிப்பாளர்கள் என பத்து வகைப்படுத்தப்படுகிறது.  


இதேபோல் ஏர் கண்டிஷனர்கள் உரைவிப்பாண்கள் போன்ற வெப்பநிலை பரிமாற்ற உபகரணங்கள் தொலைக்காட்சி கணினி மடிக்கணினி போன்ற திரைகள் மின்விளக்குகள் சலவை இயந்திரங்கள் மின்காந்த அடுப்புகள் செல்போன் பிரிண்டர் போன்ற சிறிய தகவல் தொழில்நுட்ப கருவிகள் போன்றவையும் பயன்படுத்தப்பட்ட பின்னர் மின் கழிவுகள் ஆகின்றன. அமெரிக்கா சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் மின்னனு மறுசுழற்சி செய்பவர்கள் மின்னணு சாதனங்களை பாதுகாப்பாக மறுசுழற்சி செய்வதற்கும் நிர்வகிப்பதற்கும் குறிப்பிட்ட தரநிலைகளை பூர்த்தி செய்வதை அங்கீகரிக்கப்பட்ட சுதந்திரமான மூன்றாம் தரப்பு ஆடிட்டரிடம் நிரூபிப்பதன் மூலம் சான்றிதழ் பெற ஊக்குவிக்கிறது. மிக உயர்ந்த சுற்றுச்சூழல் தரங்கள் பராமரிக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் இது செயல்பட வேண்டும் மின்னனு மறுசுழற்சியாளர்களுக்கான இரண்டு சான்றிதழ்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன சான்று அளிக்கப்பட்ட எலக்ட்ரானிக்ஸ் மறுசுழற்சிகளை தேர்வு செய்ய வாடிக்கையாளர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள் பொறுப்பான எலக்ட்ரானிக்ஸ் மறுசுழற்சி சுற்றுச்சூழல் மற்றும் மனித ஆரோக்கிய பாதிப்புகளை குறைக்கிறது. மறு பயன்பாடு மற்றும் புதுப்பிக்கப்பட்ட உபகரணங்களின் பயன்பாட்டை அதிகரிக்கிறது மற்றும் வரையறுக்கப்பட்ட வளங்களை பாதுகாக்கும் போது ஆற்றல் பயன்பாட்டை குறைக்கிறது மறு பயன்பாடு மற்றும் மறுசுழற்சி மனித உடல்நலம் அல்லது சுற்றுச்சூழலில் வெளிப்படுவதை குறைத்தால் பொருட்களின் பாதுகாப்பான நிர்வாகத்தை உறுதி செய்தல் மற்றும் மின்னணுவியலில் பயன்படுத்தும் அனைத்து தரவையும் அளிக்க வேண்டிய கடுமையான சுற்றுச்சூழல் தரநிலைகளை சான்றளிக்கப்பட்ட நிறுவனங்கள் உறுதி செய்கின்றன. சான்றளிக்கப்பட்ட எலக்ட்ரானிக்ஸ் மறுசுழற்சி செய்பவர்கள் தணிக்கைகள் மற்றும் பிற வழிமுறைகள் மூலம் குறிப்பிட்ட உயர் சுற்றுச்சூழல் தரநிலைகளை தொடர்ந்து சந்திக்கிறார்கள் மற்றும் பயன்படுத்தப்பட்ட மின்னணுவியல்களை பாதுகாப்பாக நிர்வகிக்கிறார்கள் என்பதை நிரூபித்துள்ளனர்.


மின்னணு மறுசுழற்சியாளர்களுக்கான சான்றளிக்கப்பட்ட எலக்ட்ரானிக்ஸ் மறுசுழற்சி திட்டம் என்பது தரம் சுற்றுச்சூழல் மற்றும் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு செயல் திறனுக்கான முக்கிய செயல்பாடு மற்றும் தொடர்ச்சியான முன்னேற்றக் கூறுகளை உள்ளடக்கிய ஒரு விரிவான ஒருங்கிணைந்த மேலாண்மை அமைப்பு தரமாகும். மின்னணு கழிவுகளை மறுசுழற்சி செய்வதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை தடுக்க பல வழிகள் உள்ளன மின்களிவு பிரச்சனையை அதிகப்படுத்தும் காரணங்களில் ஒன்று பல மின் மற்றும் மின்னணு பொருட்களின் ஆயுட்காலம் குறைந்து வருவது இந்த போக்குக்கு இரண்டு இயக்கங்கள் உள்ளன ஒருபுறம் குறைந்த விலை பொருட்களுக்கான நுகர்வோர் தேவை தயாரிப்பு தரத்திற்கு எதிராக போராடுகிறது மற்றும் குறுகிய தயாரிப்பு வாழ்நாளில் விளைகிறது. மறுப்புரம் சில துறைகளில் உள்ள உற்பத்தியாளர்கள் வழக்கமான மேம்படுத்துதல் சுழற்சியை ஊக்குவிக்கிறார்கள் இந்த விவகாரத்தில் நுகர்வோரின் அதிர்த்தி வளர்ந்து வரும் பழுது பார்ப்பு இயக்கத்திற்கு வழி வகுத்து எலக்ட்ரானிக் கேஜெட்களை அப்புறப்படுத்துவதை விட அவற்றை விற்பது அல்லது நன்கொடையாக அளிப்பதன் மின்னணு கழிவுகளை குறைப்பதற்கான எளிய முறையாகும். முறையற்ற முறையில் வெளியேற்றப்படும் விண்ணனி கழிவுகள் மேலும் மேலும் அபாயகரமானதாகி வருகிறது குறிப்பாக மின்னணு கழிவுகளின் அளவு அதிகரிப்பதால் பெரிய நிறுவனங்கள் பழைய மின்னணு சாதனங்களை மறுசுழற்சி செய்வதற்கான விருப்பத்தை வாடிக்கையாளர்களுக்கு ஏற்படுத்தி வருகின்றன மறுசுழற்சி செய்வது உள்ளே இருக்கும் விலை உயர்ந்த மின்னணு பாகங்களை மீண்டும் பயன்படுத்த அனுமதிக்கிறது இது மின்கழிவுகளின் உற்பத்தி அளவை கட்டுப்படுத்துகிறது. இந்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் மின் கழிவு மேலாண்மை விதிகளின் முக்கிய அம்சங்களாக ஒரு லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட உள்ளாட்சி அமைப்புகள் இரண்டு ஆண்டுகளுக்குள் திடக்கழிவு பதப்படுத்தும் வசதிகளை ஏற்படுத்த வேண்டும் ஒரு லட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகை கணக்கெடுப்பு நகரங்களில் திடக்கழிவு பதப்படுத்தும் வசதிகளை ஏற்படுத்த மூன்று ஆண்டுகள் அவகாசம் அளிக்கப்படும் பழைய மற்றும் அப்புறப்படுத்தப்பட்ட குப்பை தொட்டிகள் ஐந்தாண்டுகளுக்குள் மூடப்பட வேண்டும் எனக் கூறுகிறது எனவே சுற்றுச்சூழலை பெரும் அச்சுறுத்தலாக உள்ள மின் கழிவுகளை மேலாண்மை செய்வது நாம் ஒவ்வொருவரும் கவனம் செலுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்.


 தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad