தாமதமானாலும் தரமான வெற்றி மற்றும் தபால் வாக்குகளிலும் முன்னணி பெற்ற ஆ. ராசா - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 6 June 2024

தாமதமானாலும் தரமான வெற்றி மற்றும் தபால் வாக்குகளிலும் முன்னணி பெற்ற ஆ. ராசா

 

    நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் ஊட்டி சட்டமன்ற தொகுதிக்கு ஏற்பட்ட 13 மற்றும் 15வது சுற்றுகளின் போது இரண்டு வாக்கு பதிவு இயந்திரங்கள் பழுதாகின. பவானிசாகர் தொகுதியிலும் 16 சுற்றில் 5 இயந்திரங்கள் செயலிழந்தன இதைத் தொடர்ந்து பெல் நிறுவன  இன்ஜினியர்கள் வந்து 4 எந்திரங்களை சரி செய்தனர் மற்ற எந்திரங்களை சரி செய்ய முடியாததால் விவி பேட் எந்திரத்தில் பதிவான ஓட்டு சீட்டுகளை எண்ணி இறுதியில் முடிவுகள் அறிவிக்கப்பட்டது இதனால் கடைசி சுற்று தேர்தல் முடிவுகள் அறிவிப்பதில் ஒரு மணி நேரம் வரை தாமதம் ஏற்பட்டது.     



 மற்றும் நீலகிரி தொகுதியில் மொத்தம் 6815 தபால் ஓட்டுகள் பதிவானது இதில் அதிகபட்சமாக திமுக வேட்பாளர் ஆ. ராசாவுக்கு 2483 வாக்குகள் பதிவானது. இதேபோல் எல். முருகனுக்கு 1516 லோகேஷ் தமிழ்செல்வனுக்கு 813 ஜெயக்குமாருக்கு 233 தபால் ஓட்டுகள் பதிவானதை இந்த நிலையில் இந்த தேர்தலில் பதிவான 6815 தபால் வாக்குகளில் 5290 வாக்குகள் மட்டுமே செல்லுபடி ஆயின 1525 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டு விட்டன.   



 தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad