பந்தலுரை அடுத்துள்ள பந்தலுரை அடுத்துள்ள எருமாடு பகுதியில் அகில இந்திய காபி விவசாய சங்க குழு கூட்டம் மற்றும் கலந்தாய்வு கூட்டம் எருமை மாடு உள்ள சிபிஎம் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 18 June 2024

பந்தலுரை அடுத்துள்ள பந்தலுரை அடுத்துள்ள எருமாடு பகுதியில் அகில இந்திய காபி விவசாய சங்க குழு கூட்டம் மற்றும் கலந்தாய்வு கூட்டம் எருமை மாடு உள்ள சிபிஎம் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது..



 பந்தலுரை அடுத்துள்ள பந்தலுரை அடுத்துள்ள எருமாடு பகுதியில் அகில இந்திய காபி விவசாய சங்க  குழு கூட்டம் மற்றும் கலந்தாய்வு கூட்டம் எருமை மாடு  உள்ள சிபிஎம் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது..



பந்தலூரை அடுத்துள்ள எருமாடு பகுதியில் அகில இந்திய காபி விவசாய சங்க மற்றும் யானை வழி திருத்துக்கான மக்கள் பேரவை மத்திய குழு கூட்டம் எருமாடு பகுதியில் உள்ள சிபிஎம் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்இந்திய காபி விவசாய சங்க இணை செயலாளர் தோழர் டி ரவீந்திரன் தலைமையில் நடை பெற்றது. நிகழ்ச்சியில் அகில இந்திய பொதுச் செயலாளர் தோழர் டாக்டர் விஜூ கிருஷ்ணன் இந்திய விவசாய சங்க பொருளாளர் அகில இந்திய காப்பி விவசாய சங்க செயலாளர் கிருஷ்ணன் பிரசாத் .அகில  மற்றும் நீலகிரி மாவட்ட விவசாய சங்க இனை செயலாளர் யோககண்ணன்.சிபி எம்  மாவட்ட செயலாளர்  வி.ஏ பாஸ்கரன்  ஏரியா செயலாளர் ராஜன்  மாவட்ட ஊராட்சி  மன்ற உறுப்பினர் அனிபா மாஸ்டர்.  மற்றும் கட்சி உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்..



நிகழ்ச்சியில் அகில இந்திய காப்பி  விவசாயிகள்  சங்க இணை செயலாளர் ரவீந்திரன்  கூறுகையில் 

நீலகிரி மாவட்டம்,பந்தலூர் கூட்டத்திற்கு அகில இந்திய காப்பி விவசாயிகள் சங்க இணை செயலாளர் ரவீந்திரன் தலைமை வகித்தார்.அகில இந்திய பொதுச்செயலாளரும் டெல்லியில் நடைபெற்ற விவசாயிகள் சங்க போராட்டத்தின் முன்னோடியுமான டாக்டர் வீஜுகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசும்போது டெல்லியில் விவசாயிகள் போராட்டம் 380 நாட்கள் நடைபெற்றது இதில் ஏராளமான விவசாயிகள்  விவசாயிகள்  விவசாயிகள்  விவசாயிகள்  இறந்தனர் .அதனால் பிரதமர் நரேந்திரமோடி மூன்று விவசாயிகள் சட்டத்தை வாபஸ் பெற்றார்,நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் விவசாயிகளின் ஒற்றுமையால் பஞ்சாப்,ஹரியானா,உத்ரபிரதேசம்,ராஜஸ்தான்,மகாராஸ்ரா உள்ளிட்ட மாநிலங்களில் 38 தொகுதிகளில் பாஜக தோழ்வியுற்றது, யானை வழித்தடம் குறித்து மக்களிடம் கருத்து கேட்காமல் அரசு  கொண்டு வந்தது முறையற்ற நடவடிக்கை மக்களை பாதிக்கும் யானை வழித்தடத்தை அரசு ரத்து செய்யவேண்டும்,தமிழ்நாட்டில் 22 ஆக இருந்த யானை வழித்தடம் தற்போது 42 உள்ளது.


 இந்தியா முழுதும் எத்தனை யானை  வழித்தடங்கள் என கணக்கிட்டு விவசாயிகளை திரட்டி நாடாளுமன்றம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளோம் .தமிழ்நாட்டில் மட்டும் 32 ஆயிரம் குடியிருப்புகள் அகற்றப்பட்டு சுமார் ஒரு லட்சம் பேர் பாதிக்கும் நிலை உள்ளது என்றார்.தொடர்ந்து இந்திய விவசாயிகள் சங்க பொருளாளரும் அகில இந்திய காப்பி விவசாயிகள் சங்க செயலாளருமான கிருஷ்ணபிரசாத் பேசும்போது தமிழ்நாட்டில் நீலகிரி, கொடைக்கானல், தேனி,ஏற்காடு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு லட்சம் ஏக்கர்களில் காப்பி பயிரிடப்பட்டு வருகிறது. இதனை தனியார் கம்பெனிகள் கொள்முதல் செய்து லாபம் ஈட்டுகின்றனர். தற்போது காப்பி கொட்டை கிலோ ஒன்றுக்கு ரூபாய் 50 வரை விலை கிடைத்து வருகிறது..



 இது போதுமானதாக இல்லை அதனால் சிறு குறு  காப்பி விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.எனவே  அரசே கொள்முதல் நிலையங்கள் வைத்து காப்பியை கொள்முதல் செய்து  விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாகக்கவேண்டும்.மேலும் காப்பிக்கு குறைந்த விலை கிடைப்பதால் அரசு காப்பிக்கு கிலோ ஒன்றுக்கு ரூபாய் 25 மானியம் வழங்கவேண்டும் .இந்த கோரிக்கைகளை மத்திய மாநில அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு 

No comments:

Post a Comment

Post Top Ad