கோத்தகிரி கன்னேரிமுக்கு பகுதியில் தோன்றிய வானவில், புகைப்படம் இணையத்தில் வைரல் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 11 June 2024

கோத்தகிரி கன்னேரிமுக்கு பகுதியில் தோன்றிய வானவில், புகைப்படம் இணையத்தில் வைரல்நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒருமாத காலமாக வானிலை அடிக்கடி மாறுபடுகிறது. திடீர் திடீரென மாறும் காலநிலையை அனுபவிக்க உலகத்தின் பல இடங்களிலிருந்தும் சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வருகிறார்கள்.

இந்த அடிக்கடி மாறும் காலநிலையை பற்றி ஒரு வேடிக்கையான பழ மொழி உலாவருகிறது  நீலகிரியின் காலநிலையை கணிக்கவே முடியாது என்பர். 

ஞாயிறன்று நீலகிரி வந்த சுற்றுலா பயணிகளையும் உள்ளூர்மக்களையும் மகிழ்விக்க வானத்தில் வானவில் தோன்றியது.

வானவில் விளக்கம்.....

மழைத்துளிகளினூடாக சூரிய ஒளிக்கதிர்கள் செல்லும் போது முழு அக எதிரொளிப்பு நடைபெறுவதினால் ஒளி பிரிகையடைந்து ஏழு நிறங்களில்(VIBGYOR) வானத்தில் தெரிகின்றன. நீர்த் திவலைகளிலும் சூரிய ஒளி பிரதிபலிக்கும் போதுவானவில் தோன்றுகிறது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கன்னேரிமுக்கு பகுதியில் தெரிந்த  சுந்தர வடிவேலு என்பவரால் படம்பிடிக்கப்பட்ட வானவில் காட்சி பார்ப்பவர்களை பரவசப்படுத்தும் படி உள்ளது.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad