பரபரப்பான சாலையின் பரிதாப நிலை. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 11 June 2024

பரபரப்பான சாலையின் பரிதாப நிலை.




நீலகிரி மாவட்ட உதகை  நகரிலிருந்து குன்னூர் மேட்டுப்பாளையம் கோயமுத்தூர், பாலக்காடு,அன்னூர் அவிநாசி, திருப்பூர்,திருச்சி திண்டுக்கல். நாகர்கோயில் கன்னியாகுமாரி. மற்றும்  சென்னை. போன்ற பல பல தமிழ்நாட்டில் உள்ள ஊர்களுக்கு  தமிழக அரசின் பேருந்துகள் மற்றும் தனியார் வாகனங்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இப்படி இருக்க பல பல வாகனங்கள் செல்லும் இந்த பரபரப்பான சாலைகளில் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பல இடங்களில் சாலைகள் பழுதாடைந்து  காணப்படுகிறது. 



அதிலும் உதகை சேரிங் கிராஸ் பகுதியில் இருந்து வேல் வியூ செல்லும் வரை சாலைகள் மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. ரோடுகளில் இப்படிப்பட்ட பல இடங்களில் பல குழிகள் காணப்படுவதால்  இடது புறமும் வலது புறமும் வாகனங்களை இயக்க மிகவும் சிரமமாக உள்ளது என வாகன ஓட்டிகள் தெரிவிக்கிறார்கள். இதை உடனடியாக நகராட்சியின்  சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் நெடுஞ்சாலை துறையின் அதிகாரிகளும் உடனே இதை ஆய்வு செய்து. 



பலி வாங்க காத்திருக்கும் இந்த குழிகளை உடனே மூட வேண்டும் எனவும்  இரண்டு  சக்கர வாகனம் மற்றும் ஆட்டோ டூரிஸ்ட் வேன் கரர்  பஸ்  ஓட்டுனர்களும் அரசு வாகன ஓட்டுனர்களும் அதை தவிரபொது மக்களுக்கு சேவைபுரியும் 108 .ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களும் இந்தப்பாதை உதகை நகரில் மட்டுமல்ல தொடர்ந்து நாங்கள் மருத்துவ சிகிச்சைக்கு உதகை யிலிருந்து கோவைக்கு நோயாளிகளை அவசரமாக மேல் சிகிச்சைக்கு அழைத்து செல்லும் போது நாங்கள் எங்கள் உயிரையும் துச்சமாக நினைத்து தான் நாங்களும் இந்த பணியை செய்கிறோம் எனவே நாங்கள் வாகனங்களை இயக்கும் சாலைகள்  தரமானதாக இருந்தால் சிரமமாக இல்லாமல் நோயாளிகளின் உயிரை காப்பாற்ற எங்களால் இன்னும் விரைவாக வாகனத்தை இயக்க முடியும் என்று அவர்கள் தெரிவிக்கிறார்கள்.




 நீலகிரி மாவட்ட தமிழககுரல் இனையத்தள செய்திகளுக்காக உதகை தாலுக்கா செய்தியாளர் உதகை விஜயராஜ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழககுரல் இனையதள செய்திப் பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad