பந்தலூரை அடுத்துள்ள பாரத் மாதா பள்ளியின் 2024 ஆம் ஆண்டுக்கான முதல் துவக்க நாள் விழாவானது சிறப்பான முறையில் நடைபெற்றது - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 11 June 2024

பந்தலூரை அடுத்துள்ள பாரத் மாதா பள்ளியின் 2024 ஆம் ஆண்டுக்கான முதல் துவக்க நாள் விழாவானது சிறப்பான முறையில் நடைபெற்றதுபந்தலூரை அடுத்துள்ள உப்பட்டி பாரத் மாதா மேல்நிலைப் பள்ளியானது  1949  துவங்கப்பட்டது இந்த பள்ளியானது ஆரம்ப காலகட்டத்திலேயே கல்வியின் தரம் சிறப்பாக  இருந்தது நாளடைவி  இந்த பள்ளி சில திறமையான மாணவர்களை உருவாக்கியது  இங்கு படித்தவர்கள் அரசு பணியில் சேர்ந்து பணியாற்றுகின்றனர்.


தற்போது பள்ளியில் அதி நவின உபகரனங்களை கொண்டு மாணவர்களுக்கு பாடம் கற்பித்து வருகிறனர் .மாணவர்கள் படிப்பு விளையாட்டு கண்டு பிடிப்பு பேச்சு திறமை விளையாட்டு  திறன் போன்றவை மேன்படுத்தப்பட்டு மாணவர்கள் திறமை மிக்கவர்களாக  உள்ளனர் இங்கு கல்வி சிறப்பாக இருப்பதால் இந்த பள்ளியில் அதிகமானோர் சேர்த்து விடுகின்றனர் .


இன்னிலையில் பள்ளியின் 2023.மற்றும்.2024 ஆண்டு துவக்க நாள் விழாவானது சிறப்பான முறையில் நடைபெற்றது. பள்ளி திறக்கப்பட்டதை உணர்த்தும் வகையில் பள்ளியிலிருந்து புறப்பட்ட மாணவர்களின் பேரணி உப்பட்டி மெயின் பஜார் வழியாக பேண்ட் வாத்தியங்கள் முழங்க பள்ளி மாணவர்கள் சீருடை அணிந்து மிடுக்கான தோற்றத்துடன் பள்ளி குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்ட பேரணியானது பள்ளி வளாகத்தை சென்றடைந்தது பின்பு பள்ளியில் சிறப்பு விழாக்கள் நடைபெற்றது.


 இதில் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் முதல் மற்றும் இரண்டு இடங்களை பிடித்த மாணவ மாணவியருக்கு சிறப்பு கேடயம் மற்றும் பண முடிப்புகள் வழங்கப்பட்டது. பின்பு பள்ளி மாணவர்களுடைய கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கேரளாவில் இருந்து வருகை தந்த சுவாதி ராஜேஷ் அவர்களுடைய  வயலின் இசை மற்றும் கச்சேரி நடைபெற்றது. இதில் சுவாதி ராஜேஷ் அவர்கள் சினிமா துறையில் பின்னணி பாடகர் மற்றும் இசைக்கருடன் பணியாற்றி உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.


 நிகழ்ச்சியில் பள்ளி நடை பெற்ற நிகழ்ச்சியில் மேத்யூஅரம்பங்குடி தலைமை தாங்கினார்.  பாரத்மாத பள்ளியின் ஆசிரியர் பிஜீ ஜோசப் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.  பாரத்மாத  பள்ளி மேலாளர் ஜோர்ச்கலாயில் .கேரளா மாநிலத்தைச் சேர்ந்த  திரைப்பட பின்னனி இசை சுவாதி ராஜேஷ் . மேலும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஸ்டாலின் துணைத் தலைவர் உமர் மற்றும் பெற்றோர்கள் குழந்தைகள் என அனைவரும் கலந்து கொண்டனர்...


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு 

No comments:

Post a Comment

Post Top Ad