நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து ஒரு வாரமாக மழை பெய்து வருகின்றது. இதனால் அப்பகுதிகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது
நீலகிரி மாவட்டம் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகின்றது அதன் ஒரு பகுதியாக பந்தலூர் பகுதியில் இரண்டு நாட்களாக பெரும் கனமழை பெய்து வருகின்றது மழையின்ய காரணமாக பந்தலூர் பகுதியில் இருந்து வருகின்ற மழை நீரானது செம்மண் வயல் பகுதியில் உள்ள சுமார் 20-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் வசிக்கின்ற மக்கள் வெளியில் செல்ல முடியாத நிலைமையில் மழை நீரானது தேங்கி நிற்கின்றது அப்பகுதி மக்கள் மழை நீரில் தவித்து வருகின்றனர் இதன் காரணமாக கடந்த ஒரு வருடமாக மூன்று முறை கம்யூனிஸ்ட் கட்சியின் பொறுப்பாளர் ரமேஷ் ஆறாவது வார்டு உறுப்பினர் தலைமையில் பொதுமக்களுடன் சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது இதுவரை அந்த மனுவிற்கான எந்த ஒரு செயல்பாடும் நடைபெறவில்லை தற்போது கனமழையின் காரணமாக பொதுமக்கள் வெளியே வர முடியாத சூழ்நிலையில் உருவாகி தவித்து வருகின்றனர் இதை மாவட்ட ஆட்சியரும் மற்றும் தமிழக அரசும் சரி செய்து கொடுக்குமா என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை மனுவை வைத்துள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment