நீலகிரி மாவட்டம் குந்தா தாலுக்கா எமரால்டு பகுதிக்கு உட்பட்ட நேருநகர் பகுதியில் விலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது இதனால் நேரு நகர் பகுதி ஊர் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் உள்ளனர். 30 6 2024 இன்று அதிகாலை நேரு நகர் பகுதியில் ஜானகி என்பவரின் வீட்டின் அருகே கரடி நடமாட்டம் காணப்பட்டது பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை மக்கள் என்ன செய்வது என்று புரியாமல் தினம் தினம் உயிருக்கு அஞ்சி வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மக்கள் அச்சுறுத்தலை தவிர்க்க இதற்கு சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வேண்டுகோள் இதனை மீரும் பட்சத்தில் அடுத்த கட்டமாக பொதுமக்கள் போராட்டத்திற்கும் ஆயுத்தமான நிலையில் உள்ளனர். இதுவரையிலும் எந்த ஒரு மனித உயிர் சேதமும் ஏற்படவில்லை இதற்கு மேலும் ஏற்பட வண்ணம் வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment