கோத்தகிரியில் நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளுக்கு பேரூராட்சி எச்சரிக்கை விடுத்தது. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 15 June 2024

கோத்தகிரியில் நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளுக்கு பேரூராட்சி எச்சரிக்கை விடுத்தது.




நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சிறிய டவுன் பகுதி ஆகும் ஏராளமான அரசு அலுவலகங்களும் பள்ளிகளும் பஸ்நிலையம் மார்க்கெட் ஆகியவை குறுகிய இடத்தில் உள்ளதால் வாகன நெரிசல் பார்க்கிங் பிரச்னை மற்றும் ஜன நெரிசலால் சிக்கித்தவிக்கிறது.


காமராஜர் சிலை அருகேயும் மார்க்கெட் அருகேயும் பேரூராட்சி அலுவலகம் எதிரிலும் அமைந்துள்ள மூன்று பள்ளிகளில் சிறு குழந்தைகள் மாணவர்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் ஆகியோர் பேருந்து நிலையம் செல்ல மார்க்கெட் முதல் பேருந்து நிலையம் செல்லும் சிறிய சாலையின் ஓரமான நடைபாதையில் நடந்து செல்கின்றனர்.


இந்த நடைபாதைய ஆக்கிரமித்து பயண்படுத்துபவர்களால் பள்ளிகள் திறந்துள்ள நிலையில் மாணவ மாணவிகள் நடந்து செல்வதற்க்கு இடையூராக உள்ளது என செய்திகள் வெளியானது.

துரிதகதியில் செயல்பட்ட கோத்தகிரி சிறப்பு நிலை பேரூராட்சி நிர்வாகம் பிக்-அப் வாகனத்தில் ஒளிபெருக்கியுடன் மார்க்கெட் - பேருந்து நிலைய சாலையில் நடைபாதையை ஆக்கிரமிக்க கூடாது என எச்சரிக்கை அறிவிப்பு செய்தனர்.மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்தனர்.


எச்சரிக்கை அறிவிப்புடன் மட்டுமே நிறுத்தாமல் களத்தில் இறங்கி உடனடியாக இந்த பிரச்னைக்கு தீர்வுகான வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad