நீலகிரி- கூக்கல்தொரையில் அறிவியல் கருத்தரங்கு. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 7 June 2024

நீலகிரி- கூக்கல்தொரையில் அறிவியல் கருத்தரங்கு.



ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 7ஆம்தேதி உலக உணவு பாதுகாப்பு தினம் என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.



இன்று( ஜூன் 7) தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பாக கூக்கல்தொரை தேவமாதா செவிலியர் பயிற்சி பள்ளியில் சிறப்பு கருத்தரங்கு நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளியின் முதல்வர் அருட்சகோதரி தலைமை வகித்தார். தமிழ்நாடு அறிவியல இயக்கத்தின் நீலகிரி மாவட்ட முன்னாள் தலைவரும் மாநில கருத்தாளருமான  திரு.கே.ஜே. ராஜு (NTC) அவர்கள் சிறப்பு கருத்தாளராக கலந்து கொண்டு பேசியபோது கூறிய  கருத்துக்கள்.....  


இந்தியாவில் 90% மக்களுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைப்பதில்லை 11% இந்தியர்கள் சர்க்கரை நோயினால் அவதிப்படுகிறார்கள் 35 சதவீத மக்களுக்கு கொலஸ்ட்ரால் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது இவை அனைத்திற்கும் நம்முன்  உள்ள ஒரே தீர்வு சிறுதானிய உணவு முறையாகும் அரிசியும் சர்க்கரையும் வெள்ளை நச்சுக்கள் என்று கூறப்படுகிறது சுகாதாரத்தை பொருத்த அளவில் உலக அளவில் இந்தியா அதள பாதாளத்தில் உள்ளது நமது வாழ்நாள் நீட்டிப்பு என்பது 63 ஆண்டுகள் மட்டுமே உலக அளவில் வளர்ந்த நாடுகளில்  வாழ்நாள் நீட்டிப்பு 82க்கு மேல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பிறக்கும் குழந்தைகளில் ஆயிரத்தில் 80 குழந்தைகள் பிறக்கும்போதே மரணம் அடைந்து விடுகின்றன பிரசவத்தின் போது ஒரு லட்சம் பேருக்கு 438 பெண்கள் மரணம் அடைகிறார்கள் என ஒரு சுகாதார ஆய்வறிக்கை கூறுகிறது அடுத்த 20 ஆண்டுகளில் உலகில் உள்ள இதய நோயாளிகளில் 60% பேர் இந்தியர்களாக இருப்பார்கள் என்று ஒரு ஆய்வு கூறுகிறது தற்போது 33 புதிய வைரஸ் நோய்கள் கண்டறியப்பட்டுள்ளன மக்களுக்கான மருத்துவம் 75% தனியார் வசம் உள்ளது அரசாங்கத்தின் பங்களிப்பு மிகக் குறைந்த அளவிலேயே  உள்ளது நமது உடல் நலம் நமது உரிமை என்று ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது அரசாங்கம் மக்களின் சுகாதாரத்திற்காக அதிக அளவு நிதி ஒதுக்கி மக்களின்  சுகாதாரத்தை காக்க வேண்டும் கிராமங்களில் பணிபுரியும் மருத்துவ செவிலியர்கள் ஒரு செருப்பு அணியாத டாக்டர்கள் என்று  கூறப்படுகிறார்கள் கிராம மக்கள் இடையே சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் செவிலியர் மாணவர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது  என்பன போன்ற பல கருத்துக்களை 

ஆசிரியர் திரு. ராஜு (NTC)  அவர்கள் கூறினார்.


முன்னதாக பயிற்சி மையத்தின் ஆசிரியை திருமதி. அனிதா அவர்கள் அனைவரையும் வரவேற்றார், ஆசிரியை நந்தினி நன்றி கூறினார். பயிற்சி மையத்தின் முதல்வர் அருட் சகோதரி தாலியா தலைமை வகித்தார்.


செவிலியர்கள் பயிற்சி பள்ளியின் பயிற்சி மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K A கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad