நீலகிரி - தெப்பக்காடு முகாமில் புகுந்த மக்னா யானையால் பரபரப்பு - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 12 June 2024

நீலகிரி - தெப்பக்காடு முகாமில் புகுந்த மக்னா யானையால் பரபரப்பு




நீலகிரி மாவட்டத்தில் முதுமலை வனப்பகுதி உள்ளது இந்த வனப்பகுதிக்கு உட்பட்ட தெப்பக்காடு யானைகள் முகாமில் 30 யானைகள் பராமரிக்கப்படுகிறது.


ஞாயிறன்று வளர்ப்பு யானைகளை பராமரிப்பவர்களால் மாலை 6 மணிக்கு வழக்கம்போல் தெப்பக்காடு முகாமில் உள்ள வினாயகர் கோயில் முன்பு வளர்ப்புயானைகள் வந்தன, வளர்ப்பு யானை விநாயகருக்கு பூஜை செய்யும் போது முகாமிலுள்ள யானைகள் வினாயகர் வழிபாடு செய்யும் காட்சியை காண சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களுக்கும் அனுமதி உண்டு. பூஜை முடிந்ததும் யானைகளுக்கு உணவளிக்கப்படும்.


அந்த சமயத்தில் முதுமலை காட்டுக்குள் இருந்து வெளியே வந்த மக்னா யானை முகாம் நோக்கி வந்ததால் பயத்தில் சுற்றுலாபயணிகள் அங்கும் இங்கும் ஓடினர் உடனே களத்தில் இறங்கிய பழங்குடியினர் மற்றும் வளர்ப்புயானையின் பாகன்கள் ஒன்றிணைந்து மக்னா யானையை காட்டுக்குள் விரட்டியதால் பார்வையாளர்கள் நிம்மதி அடைந்தனர்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A.கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad