அரசாங்க மருத்துவமனையின் அவல நிலை - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 4 June 2024

அரசாங்க மருத்துவமனையின் அவல நிலை



நீலகிரி மாவட்டம் உதகை நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு தினந்தோறும் பல்வேறு நோய்களுக்கு மக்கள் வந்து சிகிச்சை பெற்று தங்கள் இல்லங்களுக்கு செல்வதும் மேலும் மருத்துவ மனையில் அனுமதி பெற்று அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகிறார்கள்.இது இப்படி இருக்க நோயாளிகள் தங்கி சிகிச்சை பெரும் தனி அறைகளும் பல்வேறு நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறும் அறைகள் ஓரளவு சுத்தம் செய்து வைத்துஇருக்கிறார்கள.



மேலும் நோயாளிகள் உறங்கும் படுக்கை களும் படுக்கை விரிப்புகளும் ஒரு சில கட்டில் களில் சுத்தம் இன்றி இருப்பதை காண முடிகிறது மற்றும். நோயாளிகள் பயன்படுத்தி வரும் கழிப்பறைகள் பொது கழிப்பறைகளைப்போல துர்நாற்றம் வீசுகிறது நோயால் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு மேலும் நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளது பல கழிப்பறைகள் உடைந்தும் குண்டும் குழியுமாகவும் அந்த குழியில் கழிவு நீர் நிரம்பிஉள்ளதையும் காண முடிகிறது மேலும் மருத்துவ மனையில் உபயோகப்படுத்தும் மருத்துவ கழிவுகளை சாக்கு பையில் கட்டி கழிப்பறைகள் முன்பு நோயாளிகள் கழிப்பறைக்குசெல்ல முடியாத படிக்கு வைத்து இருக்கிறார்கள்இதை உடனே மருத்துவமனை நிர்வாகம் கவனித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் புலம்புவதை கேட்க முடிந்தது 


நீலகிரி மாவட்ட தமிழக குரல் செய்திகளுக்காக உதகை தாலுக்கா செய்தியாளர் உதகை விஜயராஜ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இனையதள செய்திப் பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad