நீலகிரி -கலப்பட மது , கூடுதல் விலை,13 பேர் சஸ்பென்ட். - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 4 June 2024

நீலகிரி -கலப்பட மது , கூடுதல் விலை,13 பேர் சஸ்பென்ட்.





நீலகிரி மாவட்டத்தில் 73 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது.

மதுபாட்டில்களில் கலப்படம் உள்ளதாகவும், கூடுதல் விலை வைத்து விற்பதாகவும் அடிக்கடி மதுப்பிரியர்கள் கடை ஊழியர்களிடம் சண்டையிட்டு வந்தனர். சுற்றுலா பயணிகள் பல பேர்  புகாரளித்தனர்.

அதனடிப்படையில் தடாலடியாக ஆய்வு மேற்கொண்ட சென்னை  பறக்கும் படையினர்.

ஊட்டி மணிக்கூண்டு அருகே உள்ள கடை, ,லோயர் பஜார் கடை, மற்றும் ஸ்டேட் வங்கி எதிரே இயங்கி வரும் டாஸ்மாக் கடைகளில் ஆய்வு மேற்கொண்டதில் கலப்படம் மற்றும் கூடுதல் விலை ஆகிய குற்றச்சாட்டுகள் உறுதியானால் அதிரடியாக 13 ஊழியர்களை  சஸ்பென்ட் செய்ததாக நீலகிரி மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதைப் பற்றி  குடிமகன்களின் கருத்தையும் கேட்டோம். அவை பின்வருமாறு...

நீலகிரி மாவட்டத்தில் அதிக அளவு டாஸ்மாக் கடைகளில் இதே நிலை தான் தொடர்வதாகவும் கடுமையான  நடவடிக்கை தேவை எனவும்.

அதிக பணிச்சுமை, உடல் அசதி,  மனஉளைச்சல், உற்சாகம் ஆகிய காரணங்களினால்  எங்களது உடல் உழைப்பின் மூலம் கிடைக்கும்  பணத்தில் அதிக பணம் செலவழித்து மது அருந்துகிறோம். 

கலப்படம் மற்றும் அதிக விலை ஆகிய நிலை தொடர்ந்தால் காலப்போக்கில் நாங்களே மதுவை விட்டு விடுவோம் என குடிமகன்கள் கூறுகின்றனர்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A.கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad