சேரங்கோடு பஞ்சாயத்தின் மன்ற கூட்டமானது மூன்று மாதங்களுக்கு பிறகு முதன் முறையாக துவங்கப்பட்டது - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 13 June 2024

சேரங்கோடு பஞ்சாயத்தின் மன்ற கூட்டமானது மூன்று மாதங்களுக்கு பிறகு முதன் முறையாக துவங்கப்பட்டது




 நீலகிரி மாவட்டம் பந்தலூர்.சேரங்கோடு பஞ்சாயத்தின் மன்ற கூட்டமானது மூன்று மாதங்களுக்கு பிறகு முதன் முறையாக துவங்கப்பட்டது இந்த மன்ற கூட்டத்திற்கு மன்ற உறுப்பினர் கள் ஆர்வத்துடன் கலந்துக் கொண்டு தங்கள் குறைகளை எடுத்துறைத்தனர்..



சேரங்கோடு பஞ்சாயத்து மன்ற கூட்டம் மூன்று மாதங்களுக்கு பிறகு கூட்டப்பட்டு சேரங்கோடு பஞ்சாயத்து தலைவி லில்லிஏலியாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு பஞ்சாயத்து துனை தலைவர் சந்திர போஸ் செயலாளர் சஜித். மண்டல துனை வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஸ்குமார்.மற்றும் உறுப்பினர் கள் கலந்துக் கொண்டனர்.

 மன்ற கூட்டமானது துவக்கநிலையிலேயே சுமோகமாக நடை பெற்றது.


இந்த கூட்டத்திற்கு பஞ்சாயத்து தலைவி லில்லிஏலியாஸ் கூறுகையில் மூன்று மாதங்களாக பஞ்சாயத்தின் மன்ற கூட்டம் கூட்டப்படவில்லை இதனுடைய தற்போது முதன்முதலாக இந்த கூட்டம் கூட்டப்பட்டுள்ளது இந்த மூன்று மாத காலகட்டத்தில் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கக்கூடிய ஒரு சூழல் ஏற்பட்டது அது மட்டுமல்லாது இந்த போர்டு சரிவர இயங்காத நிலையில் இருந்து வந்தது கிராமப் பகுதிகளில் வீடு வசதிகள் இல்லை குடிநீர் வசதி தட்டுப்பாடு சரியான முறையில் தெரு விளக்குகள் எரியாத ஒரு சூழலில் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர்.


 இந்த சூழலில் எந்த ஒரு வித பணியும் செயல்பட முடியாத ஒரு சூழலில் இந்த மூன்று மாத காலகட்டம் நடந்து முடிந்தது அம்மன் காவு பகுதிகளில் ஏழு சாலை பணிகள் கிடப்பிலேயே உள்ளது அதுமட்டுமல்லாது மின்சார விளக்குகள் சரிவர ஆங்காங்கே அமர்த்தப்படவில்லை சொல்லப்போனால் இந்த மன்றமே சரிவர இயங்கவில்லை என அவர் குறை கூறினார். 


இதனைத் தொடர்ந்து பஞ்சாயத்து செயலாளர் சஜித் அவர்கள் கூறுகையில் மின்சாரம் குடிநீர் கிணற்று விசை பம்புகள் தெருவிளக்குகள் அனைத்தும் பொழுதாகி உள்ள நிலையில் அதற்கான செலவினங்கள் அதிகமாக .குடிநீர் குழாய்கள் உடைந்து போய் உள்ள குடிநீர் குழாய்களை சீர்படுத்துவதற்கான எடுக்கப்பட்ட குடிநீர் குழாய்கள் அனைத்தும் காணாமல் போய்விட்டது இதற்காக ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் இதனை மீண்டும் சரி செய்யப்பட வேண்டும் என்றும் . பழுது போன விசை மின் மோட்டார்கள் சரி பார்த்து மீண்டும் அப்பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்ய நாம் செயல்படுத்த வேண்டும்.


 அது மட்டும் அல்ல அது கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கு சரியான முறையில் வீடுகள் கிடைக்கப்பெறவில்லை சொலப்போனால் 90 வீடுகள் இணைப்புகள் வந்திருந்தாலும் அதற்கு பத்து வீடுகள் மட்டும் அனுமதி பெற்று வந்துள்ளது. அதுமட்டுமல்ல  குப்பைகளை கொட்டுவதற்கு  குனில்வயல்  இடம் மட்டும் நம்ம பயன்படுத்தி வருவோம் ஆனால் இங்கு உள்ள குப்பைகளை கொட்டுவதற்கு மீண்டும் ஒரு சரியான இடத்தை அதாவது மாற்று இடத்தை நம்ம தேர்வு செய்து குப்பைகளை அங்கே கொட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதனிடைய தனியார் நிறுவனம் நம் பகுதியில் உள்ள குப்பைகளை பெறுவதற்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது அது முறைப்படியாக மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்று அதை முறையாக  செயல்படுத்த வேண்டும் என்றார். 


இதுபோன்று 1010 வீடுகள் கட்டுவதற்காக ஒரு பட்டியல் எடுக்கப்பட்டுள்ளது இது கலைஞர் கனவு திட்டம் என்கின்ற அந்த அடிப்படையில் வீடுகள் கட்டுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது இதில் வெள்ளை சேரி. வெட்டுவாடி. எருமாடு. போன்ற பகுதிகளில் பயனாளிகளுக்கு வீடுகள் தேவைப்படுகின்றது என கூறினார்.


துனை தலைவர் சந்திர போஸ் கூறுகையில்யானை வழிதடத்தை நாம் நடைமுறை படுத்த விடக்கூடாது இதனை மரு பரிசீலனை செய்ய வேண்டும் இதனை தீர்மான பதிவேட்டில் ஏற்றப்பட வேண்டும் என முன்னொலிந்தார் .ஊராட்சி மன்ற கூட்டங்கள் சிறப்பாக நடத்த வேண்டும் மூன்று மாத காலம் எந்த வளர்ச்சி பணிகள் நடை பெற வில்லை பிரதம மந்திரி வீடு கட்டும் பணியில் 23.வீடுகள்  கேட்டிருந்த நிலையில் ஐந்து வீடுகள் அனுமதி கிடைத்துள்ளது.

இதில் மோசமான வீடுகள் வசித்து வரும் மக்களுக்கு கிடைக்கப்பெறாத நிலையில் தோட்டத்துறை வைத்திருக்கக் கூடியவர்களுக்கு வீடுகள் கட்டுவதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சர்  ஸ்டாலின் அவர்கள் கலைஞர் கனவு திட்ட வீடுகள் கட்டி தரப்பட உள்ளது. மேலும் வீடுகள் இல்லாதவர்களுக்கு 100 நாள் வேலைவாய்ப்பு செய்பவர்கள் செய்யக்கூடிய சூப்பர்வைசர்கள் வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டித்தர கணக்கெடுப்பு பணி நடத்துவது தவறும் என்றும் கவுன்சிலர்கள் நாங்கள் இருக்கின்றோம் ஒவ்வொரு வீடுகளுக்கும் ஒவ்வொரு கிராம பகுதிகலுக்கும் சென்று நாங்கள் எடுத்து தருகிற பட்டியலில் உள்ளவர்களுக்கு தான் வீடு வழங்க வேண்டும் என கூறினார்..


கவுன்சிலர் வினோத்கண்ணன் கூறுகையில் குழில்வயல் பகுதியில் அபாககரமான மரங்களை வெட்ட வேண்டும் இது மழைகாலம் என்பதால் எந் நேரத்தில் வீடுகளில் மீதும் விழும் அங்கன் வாடி பகுதியில் உள்ள மரங்களும் விழக்கூடும் இதனால் உயிர் சேதம் நடை பெற வாய்ப்பு உள்ளது என கூறினார்.இதை வெட்ட கோட்டாச்சியரிடமும் வனத்துறையிடமும் அனுமதி பெற்று வெட்ட வேனும் என கூறினார்..


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு 

No comments:

Post a Comment

Post Top Ad