உதகை மேலூர் ஒசாட்டி அரசு பள்ளியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 12 June 2024

உதகை மேலூர் ஒசாட்டி அரசு பள்ளியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு.



உதகை  அருகே உள்ள மேலூர்  ஓசாட்டி  அரசு மேல்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த சிறப்பு கருத்தரங்கு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி. சாந்தி அவர்கள் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில கருத்தாளர் ஓய்வு பெற்ற ஆசிரியர் திரு. கே. ஜே. ராஜு (நிறுவனர்,   NTC கல்வி குழுமம்) அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது..... 


காலநிலை மாற்றத்திற்கான காரணமாக இருக்கும் பசுமை இல்ல வாயுக்களை குறைப்பதற்கான முயற்சியில் ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட பன்னாட்டு அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன இச்சூழலில் தமிழ்நாட்டிலிருந்து வெளியேறும் பசுமை இல்ல வாயுக்களை குறைத்து தமிழ்நாட்டை பூஜ்ஜியம் உணர்வு நிலைக்கு கொண்டு வருவதற்கான செயல் திட்டத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தற்போது தமிழ்நாட்டில் வெளியேற்றப்படும் பசுமை இல்ல வாயுக்களில் பெரும்பான்மை ஆற்றல் துறையை சார்ந்து உள்ளது ஆற்றல் துறையில் மட்டும் 80 சதவீதம் வெளியிடப்படுகிறது.



 தொழிற்சாலைகளில் இருந்து 6 சதவீதமும், கழிவுகளில் இருந்து 5 சதவீதமும்,  விவசாய காடு நில பயன்பாடு காரணமாக 9 சதவீதமும் கார்பன் வெளியிடப்படுகிறது ஆற்றல் துறையை பொருத்தமட்டில் 61% மின்சாரம் தயாரிப்பதற்காகவே நடைபெறுகிறது போக்குவரத்து துறையில் 19% கார்பன் வெளிப்படுகிறது தொழிற்சாலை உற்பத்தியை பொருத்தமட்டில் 98 சதவீதம் சிமெண்ட் உற்பத்திக்காக மட்டும் நடைபெறுகிறது காகித தொழிற்சாலைகளில் இருந்து 82% பசுமை இல்ல வாயுக்கள் வெளிப்படுகின்றன இயற்கையாக இருக்கக்கூடிய காடுகளும் பசுமை பரப்புகளும் அழிந்து வருவதன் காரணமாக பசுமை இல்ல வாயுக்களை  அகற்றும் தன்மை தமிழ்நாட்டில் உள்ள நிலங்களுக்கு குறைந்துள்ளதாக இந்த ஆய்வு அறிக்கை குறிப்பிடுகிறது அதே சமயத்தில் தமிழக அரசு 2030ல் ஒரு ட்ரில்லியன் டாலர் என்ற இலக்கோடு தொழில் உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு உள்ளது தற்போது இருசக்கர வாகனங்களை பயன்படுத்துபவர்களில் பெரும்பாலனவர்கள் நான்கு சக்கர வாகனங்களுக்கு மாறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது  


இத்தகைய சூழலில் கார்பன் உமிழ்வை பூஜ்ஜிய நிலைக்கு கொண்டு வருவது மிகப்பெரிய சவாலாக இருக்கும் பொதுமக்களிடையே விழிப்புணர்வும் அவர்களின் ஒத்துழைப்பும் இல்லாமல் பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு  சாத்தியமா என்பது கேள்வி  குறியாகவே உள்ளது என்பன போன்ற பல கருத்துக்களை கூறினார்.


 குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் திரு. மனோகரன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசும் போது மாவட்ட ஆட்சியர் நீலகிரி மாவட்டத்திலுள்ள அந்நிய மரங்களை அகற்றி உள்ளூர் மரங்களை வளர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்துள்ளதாக கூறினார் அந்நிய மரச்செடிகளான கற்பூரம் போன்றவை உள்ளூர் மரங்களை விட குறைந்த அளவு பசுமை இல்ல வாயுக்களை உட்கொள்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது மேலும் பல்லுயிர் சூழலும் அதிகரிக்கும் என்பன போன்ற பல கருத்துக்களை கூறினார் முன்னதாக ஆசிரியர் திரு. சத்தியசீலன் அனைவரையும் வரவேற்றார் ஆசிரியர் திரு. மணிகண்ட ராஜு நன்றியுரை கூறினார்.  முன்னதாக மாணவர்கள் மேலூர் நகர வீதிகளில் பேரணி நடத்தினர்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad