அழிவின் பிடியில் நீலகிரி விவசாயம் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 13 June 2024

அழிவின் பிடியில் நீலகிரி விவசாயம்



2021 ஆண்டில் இணையத்தில் உலாவந்த ஒரு படம் நம் அனைவரையும் தலைக்குனிவுக்கு உள்ளாக்கியது. எதிர்கால உணவு தேவை அழிவின் பிடியில் உள்ளதை எச்சரித்துள்ளது.


நீலகிரி மாவட்டத்தில் ஏற்கனவே விவசாயம்  இயற்கை சீற்றம், வன விலங்குகள், இடுபொருள் விலை கடுமையாக உயர்வு, கூலி உயர்வு, விவசாய கூலிப்பணியாளர்கள் தட்டுப்பாடு ஆகிய பல முனைகளிலும் கடுமையான சவால்களை சந்தித்துவரும் நிலையில் 2021 ஆம் இணையத்தில் உலாவந்து டிரெண்டிங் ஆன படத்தை வெளியிட்ட நீலகிரி விவசாயிகள் நல சங்கத்தின் தலைவர் இளித்துரை திரு.N.விஸ்வநாதன் அவர்கள் சமவெளி பகுதி விவசாயிகளின் நிலைபோல் மலை மாவட்ட விவசாயிகளின் நிலை உள்ளதாகவும்

இனி வரும் இளம் தலைமுறையினர் உணவு தேவைக்கு கார்ப்ரேட் நிறுவனங்களின் மாத்திரைகளை மட்டுமே உணவாக எடுக்க வேண்டிவருமோ என எண்ணத்தோன்றுகிறது. அரசு போர்க்கால நடவடிக்கை எடுத்து மலை மாவட்ட விவசாயத்தின் வனவிலங்கு பிரச்னையை முதலில் தீர்த்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.


விவசாயிகளை போற்றுவோம் அவர்களுக்கு ஒத்துழைப்பு மற்றும் உதவி வழங்கி உறுதுணையாக இருப்போம்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad