போலி பத்திரப்பதிவை ரத்து செய்ய இளித்துரை சிறு விவசாயிகள் கோரிக்கை. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 13 June 2024

போலி பத்திரப்பதிவை ரத்து செய்ய இளித்துரை சிறு விவசாயிகள் கோரிக்கை.




நீலகிரி மாவட்டம் இளித்துரை கிராமத்தில் சிறு விவசாயிகளின் தேயிலை தோட்டத்தை போலி நில உரிமைச்சான்று மூலம் சென்னையை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்திற்க்கு  சிட்டாவில் பெயர் உள்ள நான்கைந்து நபர்களின் பெயர்களில் நில உரிமைச்சான்று பெற்று பல விவசாயிகளிடம் உள்ள சிறு சிறு தோட்டங்களையும் இணைத்து 17 ஏக்கர் நிலம் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது




தங்களின் வாழ்வாதாராமான சிறு தோட்டத்தை  தனியார் நிறுவனம் உரிமை கொண்டாடி வேலி அமைப்பதை கண்ட விவசாயிகள் அதிர்ச்சியடைந்து அரசிடம் முறையிட்டனர் மற்றும் நீலகிரி விவசாயிகள் நல சங்கத்தின் தலைவர் இளித்துரை திரு.N.விஸ்வநாதன் அவர்களுடன் இணைந்து தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தங்களின் நிலம் திருட்டுத்தனமாக களவாடப்பட்டதை அறிந்தனர்.

பல்வேறு பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகள் ஆகியவை செய்தி வெளியிட்டது.இந்த நிலையில் விவசாயிகளை அழைத்த மாவட்ட பதிவாளர் அவர்கள் விசாரித்தார். போலி பத்திரப்பதிவை ரத்து செய்ய வேண்டும் என  இளித்துரை ஊரைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட சிறு விவசாயிகள் முறையிட்டனர்.

சட்டவிரோதமாக குறிப்பிட்ட சிலர்பெயரில் வழங்கப்பட்ட நில உரிமைச்சான்றினால் ஏற்பட்ட போலி பத்திரப்பதிவிற்க்கு எந்த விதமான விசாரணையும் செய்யாமல் நில உரிமைச்சான்று வழங்கிய கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் மற்றும் வட்டாட்சியர் அவர்களே உடந்தை எனவும் அவர்களிடம் விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுத்து அந்த பத்திரப்பதிவை ரத்து செய்ய வேண்டும் என்பதே இளித்துரை பகுதி சிறு விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.


மாவட்ட நிர்வாகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் வருவாய்துறை, பத்திரபதிவுத்துறை ஆகிய சம்மந்தப்பட்ட அணைத்து துறையிலும் பல முறை முறையிட்டும் பத்திரபதிவை ரத்துசெய்ய எந்தவிதமான நடவடிக்கையும் இது வரை இல்லாததால் 300 க்கும் மேற்பட்ட இளித்துரை பகுதி சிறு விவசாயிகள் தங்களுக்கு பாத்தியப்பட்ட தோட்டங்களுக்கு போலி பத்திரம்மூலம்  தனியார் நிறுவனம் நுழைவதை  தடுத்து தாங்களே சென்று தேயிலை பறித்து ஏற்கனவே மூததையர் காலம் தொட்டு பல தலைமுறைகளாக  தங்களது அனுபோகத்தில் இருந்த தத்தமது தோட்டங்களில் ‌தேயிலை பறித்து அபிவிருத்தி செய்து அனுபோகம் செய்துவருகின்றனர்.


நமது தமிழக குரல் செய்திக்கு பேட்டியளித்த நீலகிரி விவசாயிகள் நல சங்கத்தின் தலைவர் இளித்துரை திரு.N.விஸ்வநாதன் அவர்கள்   இளித்துரை பகுதி சிறு விவசாயிகளின்  சிறு சிறு தோட்டங்கள் மீது செய்யப்பட்ட போலி பத்திரப்பதிவை உடனடியாக ரத்து செய்யவேண்டும் எனவும் தாமதித்தால் நீலகிரி மாவட்டத்தின் அனைத்து விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்கங்களை ஒன்றிணைந்து மாபெறும் அறவழி உரிமைமீட்பு போராட்டம் நடத்தப்படும் என்று கூறினார்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad