பச்சை பசேலென மாறிய கெத்தை சாலை சோலைகள். - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 15 June 2024

பச்சை பசேலென மாறிய கெத்தை சாலை சோலைகள்.


நீலகிரி மாவட்டத்திற்க்கு வரும் 3 ஆம் பாதை காரமடை கெத்தை மஞ்சூர் சாலையாகும்  மூன்றாண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட புதிய தார்சாலை மிகவும் நேர்த்தியாக உள்ளது.


மஞ்சூர் கெத்தை காரமடை சாலை 43 கொண்டைஊசி வளைவுகளுடன் 62 கிலோ மீட்டர் தூரம் கொண்டது.



கடந்த டிசம்பர் முதல் இந்த சாலையோர சோலைகள் வறட்சியின் பிடியில் சிக்கிய நிலையில் மே மாதம் பெய்த கோடைமழை மற்றும் ஜூன் மாதத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்ச்சியால் கிடைத்த மழை ஆகிய காரணங்களினால் கெத்தை சாலை ஓரத்தின் சோலைகளில் உள்ள காடுகள் பச்சைபசேலென மாறியுள்ளது. சாலையோர நீர்வீழ்ச்சியில் நீர் ஆர்ப்பரித்து கொட்டும் காட்சி, இனிமையான சோலை காற்று, ஆராவாரமில்லாத அமைதியான சாலை ஆகியவை சுற்றுலா பயணிகளை நீலகிரி பக்கம் இழுக்கிறது.



வார இறுதி நாட்களில் மஞ்சூர் பகுதிகளில் உள்ள காட்டேஜ்களுக்கு சமவெளி பகுதி மக்கள் படையெடுத்து வருகின்றனர்.


வனப்பகுதி இந்த மழையால் பசுமைக்கு திரும்பியுள்ளதுடன் வனவிலங்குகளின் உணவுத்தேவை பூர்த்தியடைந்ததால் அவை சாலைக்கு வராமல் வனத்திலேயே தஞ்சமடைந்துள்ளது. ஆகவே  பொது மக்கள் அச்சமின்றி மஞ்சூர் கெத்தை காரமடை சாலையில் பயணித்துவருகின்றனர்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad