உதகை செல்ல புதிய பை-பாஸ் சாலை . - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 14 June 2024

உதகை செல்ல புதிய பை-பாஸ் சாலை .



நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு மேட்டுப்பாளையத்திலிருந்து வரும் வாகனங்கள் குன்னூர் டவுன் பகுதிக்கு செல்லாமல் உதகை செல்ல  புதிய பை-பாஸ் சாலை அமைக்கும் பணி முழுவீச்சில் நடந்துகொண்டிருக்கிறது.


ரூபாய் 40 கோடி மதிப்பீட்டில் 20.5 கிலோமீட்டர்கள் சாலை

காட்டேரி சந்திப்பிலிருந்து இடது புறம் சென்று சேலாஸ் கொல்லிமலை வழியாக உதகை செல்லும் வகையில் புதிய பாதை அமைக்கப்படும் பணி 80 சதவிகிதம் முடிவடைந்து சுறு சுறுப்புடன் நடைபெற்று வருகிறது. 




இந்த சாலையானது நீலகிரியில் இரண்டாம் சீசன் துவங்கும்பொழுது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்துவிடும் என நெடுஞ்சாலைத்துறை உதவிபொறியாளர்  திரு. பாலச்சந்திரன் அவர்கள் தெரிவித்தார்.


இந்த சாலையின் பயண நேரம் 1மணி நேரம் 24 நிமிடங்களாகும். இதனால் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் பயணிக்கலாம் மற்றும் குன்னூர் டவுன் பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பிப்பது தவிர்க்கப்படும்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad