விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்களும் கிறிஸ்தவ சமூக நீதிப் பேரவை நீலமலை மேற்கு மாவட்டம் மற்றும் நீலகிரி அனைத்து கிறிஸ்தவ திருச்சபைகளின் கூட்டமைப்பு ஒன்று கூடி நடத்திய மாபெரும் கவலை ஈர்ப்பு ஆர்ப்பாட்டம். இன்று காலை 11 மணியளவில்.உதகை ஏடிசி அருகில் உள்ள. ஜீப் ஸ்டாண்ட் அருகே நடைபெற்றது. நாடு முழுவதிலும் கிறிஸ்தவ சிறுபான்மை மக்களை குறிவைத்து அச்சுறுத்தி தாக்குதல் நடத்தும் போக்கை தடுத்துநிறுத்தக் கோரியும் மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தியும். மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்தில் விடுதலை. சிறுத்தைகள் கட்சியினர்களும் நீலகிரி மாவட்ட திருச்சபைகளின் போதகர்களும் விசுவாசப் பிள்ளைகளும் திரளாக கலந்து கொண்டார்கள். இந்த மாபெரும் ஆர்பாட்டத்தில் நோக்கம் என்னவெனில். நாடு முழுவதிலும் உள்ள சிறுபான்மை கிறிஸ்தவ மக்களுக்கு எதிராகவும் அவர்களின் வழிபாட்டுத் தலங்கள் மீதும். 600க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் வரை மட்டும். நடத்தி இருப்பதாக யுனைடெட் கிறிஸ்டியன்.ஃபோரம் ucf வெளியிட்டுள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.
மேலும் சிலர் கிறிஸ்தவ போதகர்கள் மதமாற்றம் செய்கிறார்கள் என போலியான செய்தி பரப்பி அவர்கள் மீது தாக்குதல்களை ஏவிவிடும் போக்கையும் அரசு இயந்திரங்களை பயன்படுத்தி அவர்கள் நடத்தும் வழிபாட்டுக் கூடங்கள் மீது ஆய்வு என்கின்ற பேரில் ஒடுக்கு முறைகளை தினிப்பதையும் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் நீலகிரி அனைத்து கிறிஸ்தவ. திருச்சபையின் கூட்டமைப்பும் வன்மையாக கண்டித்து. இதை உடனடியாக ஒன்றிய அரசும் தமிழ்நாடு அரசின் சிறுபான்மை நலத்துறையும் ஆணையமும் தலையிட வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அநேக ஊழியர்கள் கலந்து கொண்டார்கள். அதிலும் நேரம் காலம் கருதி ஒரு சிலருக்கே பேச வாய்ப்புகள் கொடுக்கப்பட்டது. போதகர்கள் கோல்ரஸ் ஸ்டீபன் பால். சூரி ஸ்டீபன். தினகரன். இன்னும் ஒரு சில போதகங்களும் தங்களின் நியாயமான கோரிக்கைகளையும் ஆர்பாட்டத்தின் நோக்கங்களையும். குறித்துப் பேசினார்கள். அவர்கள் கூறியதாவது. நாங்கள் யாருக்கும் எதிரானவர்கள் அல்ல. அனைவரையும் அரவணைக்கும் மனப்பக்குவம் கொண்டவர்கள். நாங்களும் வேதத்தின் படி நடக்கிறவர்கள். அழிந்து போகிறவர்களை மீட்டெடுப்பவர்கள். மீட்டெடுத்தவர்கள் மீட்டெடுத்துக் கொண்டிருப்பவர்கள் என்றும் முழங்கினார்கள். இறுதியாக இந்த மாபெரும் கவன ஈர்ப்புஆர்பாட்டக் கூட்டம். நிறைவுப் பெற்றது.
நீலகிரி மாவட்ட தமிழககுரல் இனையத்தள செய்திகளுக்காக உதகை தாலுக்கா செய்தியாளர் உதகை விஜயராஜ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழககுரல் இனையத்தள செய்திப் பிரிவு
No comments:
Post a Comment