நீலகிரி மாவட்டம் உதகைய அடுத்துள்ள காந்தல் இந்திரா காலனியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சில மாதங்களாக இந்த பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை என்ற புகார் நகராட்சி கவுன்சிலர் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அவரும் அதைப்பற்றி கண்டு கொள்ள படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்பொழுது கடந்த ஏழு நாட்களாக இரவு 12 மணிக்கு மேல் காலை 4 மணி வரையிலும் குடிநீர் வருகிறது இந்த நேரத்தில் குடிநீர் வருவதால் குடிநீர் பிடிப்பதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. இந்த பகுதி முழுவதும் ஏழை எளிய குடும்பங்களாக இருப்பதால் கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்லும் இல்லங்களில் இரவு நேரப் பொழுதில் ஓய்வெடுக்கும் நேரத்திலும் தண்ணீருக்காக காத்திருந்து தண்ணீர் பிடிக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. மற்ற நேரங்களிலோ காலை நேரங்களிலோ தண்ணீர் வருவதில்லை இது பற்றி பொதுமக்கள் பலமுறை தங்களது நகராட்சி கவுன்சிலர் அவர்களுக்கு தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.இதற்கு மேலும் இந்த நிலை தொடர்ந்தால் தண்ணீர் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபடுபடுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு மேலாவது குடிநீர் வரும் என்ற நம்பிக்கையுடன் இந்த முடிவை அறிவித்துள்ளனர் இதன் பின்னரும் நகராட்சி நிர்வாகம் தனது மெத்தன போக்கை கைவிட்டு குடிநீருக்கு வழிவகை செய்யாவிட்டால் அடுத்த ஓரிரு நாட்களில் அனைத்து பொதுமக்களும் ஒன்று திரண்டு காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபடுவோம் என தெரிவித்துள்ளனர்...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment