கோத்தகிரியில் திரு.ராகுல்காந்தி அவர்கள் பிறந்தநாள் விழா கொண்டாட்டம். - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 20 June 2024

கோத்தகிரியில் திரு.ராகுல்காந்தி அவர்கள் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்.


நீலகிரி மாவட்டம் கோத்தகிரியின் இதயப்பகுதியான காமராஜர் சிலை வளாகத்தில்  கோத்தகிரி வட்டார காங்கிரஸ் தலைவர் கேர்கம்பை திரு. சில்லபாபு அவர்கள் தலைமையில், ஜக்கனாரை திரு.ராஜூ மற்றும் திரு.A.K. தேவராஜ் ஆகியோர் முன்னிலையில் திரு. ராகுல் காந்தி அவர்களின் பிறந்தநாள் விழா மிகவும் மகிழ்ச்சியாகவும் சிறப்பாகவும் கொண்டாடப்பட்டது.



இந்த சிறப்பு மிக்க விழாவில் O.B. ரவி, சேலக்கொரை பெள்ளி, தாந்தநாடு ஜார்ஜ், மிளிதேன் சாந்து வாத்தியார், எரிசிபெட்டா ரமேஷ், கேசவன், வெள்ளையன், போஜராஜன்(காமன்), B.S.பேக்கரி முருகன், கேர்பெட்டா சேகர், ராஜூ, கோபால்,சந்திரன், OBC நிர்வாகிகள், தேவகி, சித்ரா உட்பட ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டு திரு.ராகுல் காந்தி வாழ்க, காங்கிரஸ் வளர்க, என கோஷமிட்டதுடன் திரு.ராகுல் காந்தி அவர்களின் பிறந்தநாள் விழாவை கொண்டாடி  காமராஜர் சிலை சுற்றுவட்டாரத்தில் இந்த நிகழ்சியை காணவந்த பொதுமக்கள் உட்பட அனைவருக்கும் இனிப்புகளை வழங்கி உற்சாகத்துடன் திரு. ராகுல் காந்தி அவர்களின் பிறந்தநாள் விழாவை கொண்டாடினர்.


அதே உற்சாகத்துடன் கேர்கம்பை அரசு பள்ளிக்கு கோத்தகிரி வட்டார காங்கிரஸ் தலைவர் திரு.சில்லபாபு அவர்கள் தலைமையில் சென்ற காங்கிரஸ் தொண்டர்கள் மாணவ மாணவியர்களுக்கு நோட்டு புத்தகங்கள் மற்றும் இனிப்புகள் வழங்கி திரு.ராகுல்காந்தி அவர்களின் பிறந்தநாள் விழாவை  சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர் .


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad